tech news
நோக்கியா Lumia டிசைனில் புது HMD போன்
HMD குளோபல் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் HMD ஹைப்பர் என்ற பெயரில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும், புது ஸ்மார்ட்போனின் அம்சங்களும் தெரியவந்துள்ளது.
அதன்படி புதிய HMD ஹைப்பர் ஸ்மார்ட்போன் 120Hz OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா லூமியா டிசைன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. சமீபத்தில் HMD பார்பி ப்ளிப் போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆனதைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி உள்ளது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 13MP லென்ஸ், 8MP சென்சார் மற்றும் 50MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. மேலும் அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழங்கும் வகையில் கூடுதல் அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8GB ரேம், 256GB மெமரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
புதிய HMD ஹைப்பர் ஸ்மார்ட்போன் 4700mAh பேட்டரி மற்றும் 33W சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இதுவரை வெளியான ரென்டர்களின் படி புதிய HMD ஸ்மார்ட்போன் நோக்கியா லூமியா 920 தோற்றத்தை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் என்றும் சதுரங்க வடிவிலான தோற்றம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் வலதுபுறத்தில் வழங்கப்படுகிறது. பின்புறம் வட்ட வடிவ கேமரா பம்ப் மற்றும் HMD பிராண்டிங் கொண்டிருக்கிறது.