Connect with us

latest news

போடு..அடுத்து வெளியாகபோகுது புது மாடல் டேப்லெட்..Honor Pad X9…

Published

on

honor pad x9

ஹானர் பேடு X9(Honor Pad X9) டேப்லட்(Tablet) உலகசந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆனாலும் தற்போது இந்திய சந்தையினுள் நுழைய தயாறாகிவிட்டது. இ-வணிக ஜாம்பவான் அமேசான் நிறுவனம் இந்தியாவில் இந்த டேப்லட்-ன் அறிமுகத்தை பற்றி வெளியிட்டுள்ளது. ஹானர்-ன் இந்திய வெப்சைட்டிலும் ஹானர் பேடு X9(Honor Pad X9) டேப்லட் இடம்பெற்றுள்ளது. ஆனால் எப்போது விற்பனைக்கு வரும் என்று கூறபடவில்லை.

honor pad x9 available in amazon soon

ஸ்டோராஜ்:

இந்த டேப்லட் 4GB RAM+128GB storage-உடன் கிடைக்கவிருக்கிறது. எக்ஸ்பாண்டபில் RAM டெக்னாலஜி இந்த டேப்லட் -ல் உள்ளது. அதனால் உபயோகிக்கப்படாத சேமிப்பு பகுதிகளை பயன்படுத்தி  மேலும் 3GB virtual RAM-ஆக பயன்படுத்திகொள்ளலாம்.

பேட்டரி மற்றும் வண்ணம்:

ஹானர் பேடு X9, ஆண்ட்ராய்டு 13 ஐ சார்ந்த மேஜிக் OS 7.1-னினால் இயங்குகிறது. ஹானர் பேடு X9 டேப்லட்(Tablet) – ல்  7250 mAh பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த டேப்லட் Space Gray Colour -ல் மட்டுமே இந்தியாவில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

திரை:

1.5இன்ச் தொடுதிரை 2K (1200×2000 pixels) IPS HD LCD display , 120Hz refresh rate-உடன் ஹானர் பேடு X9 டேப்லட்(Tablet) – ல் இடம்பெற்றுள்ளது. இந்த  டேப்லட் -ன் ஸ்க்ரீன்-பாடி விகிதம்(screen to body ratio) 86% மற்றும் 100% RGB colour gamut கொண்டுள்ளது. இந்த டேப்லட் -ல் Snapdragon 685 4G SoC இடம்பெற்றுள்ளது.

கேமரா:

5mp back camera

இதன் பின்புற்த்தில் 5 MP rear camera இடம்பெற்றுள்ளது அதேபோல் முன்பகுதியிலும் 5 MP front camera இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 6 speaker-களுடன் இந்த டேப்லட் உள்ளது.

இதர வசதிகள்:

இந்த  டேப்லட் -ல் இணைப்பிற்காக  WI-Fi 5, Bluetooth 5.1 connectivity மற்றும் USB Type-c Port போன்ற வசதிகளும் உள்ளன. இந்த டேப்லட் -ன் அளவு 267.3×167.4×6.9 mm மற்றும் 499 g எடை கொண்டதாகும். ஹானர் பேடு X9(Honor Pad X9) டேப்லட்(Tablet), இந்தியாவில் அமேசான் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

ஹத்ராஸ் விபத்து நடந்தது எப்படி?!. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி!..

Published

on

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் எனும் கிராமத்தில் நேற்று ஒரு இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. பாபா நாராயணன் ஹரி என்கிற சாஹர் விஷ்வஹரி போலே பாபா சாமியார் இந்த விழாவை நடத்தினார். அந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். தற்போது வரை 122 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இந்த விழாவில் 80 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது தெரியவந்திருக்கிறது. ஆன்மிக சொற்பொழிவு முடிந்தவுடன் பாபா காரில் ஏறி புறப்பட்டபோது அவரை பின் தொடர்ந்து பலரும் போயிருக்கிறார்கள். அவரின் கார் புறப்பட்டபோது அதன்பின்னால் பலரும் ஓடி இருக்கிறார்கள்.

அதில் பலரும் பாபாவின் காலடி மண்ணை எடுக்க கீழே குனிந்துள்ளனர். அப்போதுதான் கீழே குனிந்தவர்கள் மீது பலரும் ஏறி நடந்துள்ளனர். இதில் சிக்கிய பலரும் மூச்சி முட்டி இறந்திருக்கிறார்கள். மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு அருகே சாக்கடை ஓட்டிக்கொண்டிருந்தது. பக்தர்கள் வேகமாக வெளியேறிய போது பலரும் அதில் விழுந்தார்கள். இப்படித்தான் 121 பேர் இறந்து போயிருக்கிறார்கள். குறிப்பாக இறந்து போனவர்களில் பலரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதிதய்நாத் பார்வையிட்டார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘சொற்பொழிவு முடிந்ததும் போலே பாபாவை நோக்கி மக்கள் முண்டியடித்து சென்றதால் விபத்து ஏற்பட்டது. அவரை நோக்கி மக்கள் சென்றபோது நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். உயிரிழந்த 121 பேரில் 6 பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள்’ என அவர் கூறினார்.

Continue Reading

india

ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா!. ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்..

Published

on

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் பதவியில் இருந்தவர் சம்பாய் சோரன். இவர் ராஞ்சியில் உள்ள ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார் ஹேமந்த் சோரன்.

சட்ட விரோத பணிவர்த்தனை வழக்கில் சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தார் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்டின் முதல்வராக மாறவிருக்கிறார். தலைநகர் ராஞ்சியில் ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தில் ஹேமந்த் சோரனை முதல்வர் பதவியில் அமர வைப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

செய்தியாளர்களிடம் பேசிய சம்பயி சோரன் ‘ கடந்த சில நாட்கள் முதல்வர் பதவியில் இருந்ததால் மாநில நிர்வாக பொறுப்புகளை கவனித்து வந்தேன். தற்போது ஹேமந்த் சோரன் திரும்பி வந்திருப்பதால் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எனவே, நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்’ என கூறினார்.

Continue Reading

india

மேற்கூறையில் இருந்து பிச்சுகிட்டு கொட்டும் தண்ணீர்… ‘வந்தே பாரத்’ ரயிலில் பயணிகள் அவதி… வைரல் வீடியோ…!

Published

on

வந்தே பாரத் ரயிலின் மேற்கூறையிலிருந்து தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அவுதி அடைந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

டெல்லியில் இருந்து வாரணாசி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. ட்ரெயினில் இருந்து தண்ணீர் ஒழுகும் வீடியோ ஒன்றை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் பகிர்ந்த பயணி இது குறித்து புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக வடக்கு ரயில்வே தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது. அதில் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளில் இருந்து இந்த நீர்க்கரசிவு ஏற்பட்டு இருக்கலாம். பயணிகள் சிரமப்பட்டதற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இதனை சரி செய்ய ஏற்பாடு செய்கிறோம் என்று பதிவிட்டு இருந்தது.

இருப்பினும் ரயிலில் இருந்து நீர் ஒழுகும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இதை பார்த்த நெட்டிஷன்கள் பலரும் ரயில்வே துறையின் அலட்சியத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Continue Reading

latest news

அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!

Published

on

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பெரம்பலூர், கடலூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், மதுரை, விழுப்புரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். மேற்கு திசை காட்டின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் வரும் ஏழாம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசம்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

Continue Reading

latest news

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து… கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா… என்னதான் நடக்குது..

Published

on

கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்ததை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்திருக்கின்றார்.

தமிழகத்தில் சென்னை மாநகராட்சியை தொடர்ந்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை. இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இதில் 97 பேர் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள். மூன்று பேர் மட்டுமே அதிமுகவை சேர்ந்தவர்கள். கோவை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த கல்பனா என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர்.

இவரது கணவர் ஆனந்தகுமார் திமுகவில் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகின்றார். மேயர் கல்பனா பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் எழுந்தது. அது மட்டும் இல்லாமல் கல்பனாவின் அதிகாரத்தில் அவரின் கணவர் ஆனந்தகுமார் தலையிட்டு வருகின்றார். இதன் காரணமாக திமுக கவுன்சிலர் மட்டத்திலும் நிர்வாகிகள் மத்தியிலும் பெரிய அளவுக்கு நம்பிக்கை பெறாததால் திமுக கவுன்சிலர்களே தங்களது எதிர்ப்பை காட்டி வந்தார்கள்.

இதனால் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறியிருந்தார் கல்பனா. இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார். தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியிருக்கின்றார். இந்த கடிதத்தை ஆணையரும் ஏற்றுக்கொண்டார். மேயர் கல்பனா ராஜினாமா செய்தது மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.

இப்படி இருக்க அடுத்த சிறிது நேரத்தில் நெல்லை மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார். நெல்லை மாநகராட்சியில் திமுக மேயராக இருந்து வருபவர் பி எம் சரவணன். இவரது தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடத்துவதில் பல பிரச்சினைகள் நிலவிய வந்துள்ளது. சமீபத்தில் மாநகராட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதில் கலந்து கொள்ள திமுக கவுன்சிலர்களே வராத காரணத்தினால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த சூழலில் சென்னை பெயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இன்று கட்சி தலைமையிடம் தனது பதவியை ராஜினாமா செய்வதற்குரிய கடிதத்தை வழங்கி இருக்கின்றார் சரவணன். முதல்வர் மு க ஸ்டாலின்  அறிவுறுத்தலின் பெயரில் தான் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

Trending

Exit mobile version