ஹானர் பிரான்டின் முற்றிலும் புதிய மேஜிக் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. முந்தைய தகவல்களின் படி மேஜிக் 7 சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் வழங்கப்படுகிறது.
முந்தைய மாடலை போன்று புதிய ஹானர் 7 மேஜிக் ப்ரோ மாடலிலும் மாத்திரை வடிவம் கொண்ட பன்ச் ஹோல் வழங்கப்படுகிறது. இந்த கட்-அவுட்டில் இரட்டை கேமரா சென்சார்கள், 3டி ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் கர்வ்டு டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹானர் மேஜிக் 7 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு சென்சார், 50MP டெலிபோட்டோ சென்சார், 50MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5800 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 100 வாட் வயர்டு, 66 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார், IP68 அல்லசு IP69 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த மேஜிக் ஓ.எஸ். 9 கொண்டிருக்கிறது. இத்துடன் 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி என மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…