Connect with us

latest news

EPF-க்கு வரி விதிப்பு மற்றும் வரி விலக்கு.. முழு விவரங்கள்

Published

on

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) திரும்பப் பெறும் போது பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வெவ்வேறு வரி செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமிப்பு திட்டம் ஆகும்.

பங்களிக்கும் கட்டத்தில் இது வரிச் சலுகைகளை அளித்தாலும், சேமிக்கப்பட்ட தொகையை திரும்பப் பெறும்போது அதற்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகின்றன. இது பணப் பயன்பாட்டின் நோக்கம் மற்றும் காலத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

ஊழியர் தரப்பில் இருந்து, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80c இன் கீழ், செலுத்தப்பட்ட பங்களிப்புக்கு விலக்கு அளிக்கப்படலாம். ஆனாலும், இதற்கு அதிகபட்ச வரம்பு ரூ. 1.5 லட்சம் மட்டும்தான். நிறுவனங்கள் தரப்பில் இருந்து, பணியாளரின் சம்பளத்தில் 12% வரையிலான பங்களிப்புக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தற்போது EPFக்கு எப்படி வரி விதிக்கப்படுகிறது என தெரியுமா?

நிதி சட்டம் 2021-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை அடிப்படையாக கொண்டு ரூ. 2.5 லட்சம் மற்றும் அதைவிட அதிகமான வைப்பு நிதி பங்களிப்புத் தொகைக்கான வட்டிக்கு வரி விதிக்கப்படும்.

ஊழியர்கள் EPF பங்களிப்புகளை மட்டுமே செய்து, நிறுவனம் அல்லது முதலாளி அவ்வாறு செய்யவில்லை எனில், வரி செலுத்தப்படாத வட்டித் தொகையின் அதிகபட்ச வரம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று சூரானா கூறியதாக தனியார் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 9.5% க்கும் அதிகமான பங்களிப்பில் சம்பாதித்த எந்த வட்டிக்கும் வரி விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

நிறுவனம் அல்லது முதலாளி பங்களிப்பு என்று வரும்போது, ​​ரூ. 7.5 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமான தொகைக்கு வரி விதிக்கப்படும்.

EPF-இல் இருந்து மொத்தத் தொகையை ஊழியர் பெறும் போது, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10(12) இன் கீழ், ஊழியர் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தொடர்ச்சியான சேவையை முடித்திருந்தால், அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

  • உடல்நலக்குறைவு காரணமாக அந்த ஊழியர் பணியில் இருந்து நீக்கப்பட்டால் வரிவிலக்கு.
  • பணியாளரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்கள், முதலாளியின் வணிகம் நிறுத்தப்படும் போது வரி விலக்கு கிடைக்கும்.
  • ஊழியர் வேறொரு இடத்தில் பணியமர்த்தப்பட்டாலோ அல்லது EPF இருப்பு புதிய முதலாளிக்கு மாற்றப்படும் போதோ வரி விலக்க வழங்கப்படும்.
google news