Connect with us

tech news

ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் பயன்படுத்த தனி கட்டணம் – எவ்வளவு தெரியுமா?

Published

on

ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளை ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் பெயரில் வழங்க இருக்கிறது. இது தொடர்பான சில வசதிகள் மற்றும் அம்சங்கள் ஆப்பிள் ஐஓஎஸ் 18.1 டெவலப்பர் பீட்டாவில் வழங்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அம்சங்கள் பயனர்களுக்கான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் அம்சங்களை பயன்படுத்த தனி கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான துவக்க விலை 20 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1679 முதல் துவங்கும் என கூறப்படுகிறது. விலை விவரங்களை ஆப்பிள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எனினும், இவற்றின் விலை குறித்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.

ஐஓஎஸ் 18.1 பீட்டாவில் ஆப்பிள் ஏஐ அம்சங்களில் கால் ரெக்கார்டிங், டிரான்ஸ்க்ரிப்ஷன், எழுதும் டூல்கள் மற்றும் மேம்பட்ட சிரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. படிப்படியாக பீட்டா வெர்ஷனில் ஏஐ அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் ஏஐ சார்ந்த அம்சங்கள் அதிகளவில் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில், இது தொடர்பான போட்டியில் முன்னிலையில் இருக்க ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் சேவையை வழங்க இருக்கிறது. இது தொடர்பான அம்சங்கள் பயனர்களுக்கு பல விஷயங்களில் உதவியாக இருக்கும் என்று எதிராபார்க்கலாம்.

அனைவருக்குமான ஓஎஸ்-இல் ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் வசதிகள் எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவை பெரும்பாலும் சாம்சங்கின் கேலக்ஸி ஏஐ சேவைக்கு போட்டியாகவே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

google news