Connect with us

latest news

உட்கார்ந்த இடத்தில் ஓட்டுநர் உரிமம் – ஈசியா விண்ணப்பிக்க சூப்பர் டிப்ஸ்

Published

on

இந்தியாவில் வாகனம் ஓட்டுபவர்கள் அதற்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது அவசியம் ஆகும். மேலும், அவர்கள் பயன்படுத்தும் வாகனத்திற்கு முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இவற்றை பின்பற்றாமல் போக்குவரத்து அதிாரியிடம் சிக்கும் பட்சத்தில் அதற்கான அபராத தொகையை செலுத்த வேண்டும். இந்த அபராத தொகை ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப வேறுபடும்.

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. ஒருபுறம் அபராத தொகை உயர்த்தப்பட்ட நிலையில், பயனர்கள் அதற்கான ஆவணங்களை பெறுவதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வலைதளம் மூலம் பயனர்கள் போக்குவரத்துத் துறை சார்ந்த ஆவணங்களை பெற எளிதில் விண்ணப்பிக்க முடியும்.

ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

முதலில் பரிவாஹன் அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று ஓட்டுநர் உரிமம் சார்ந்த சேவைகளை குறிக்கும் ‘License Related Services’ ஆப்ஷனில் Drivers/Learners License என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இனி உங்களது மாநிலத்தை தேர்வு செய்து ‘Apply for Driving License,’ மற்றும் ‘Continue’ ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

அடுத்த வலைப்பக்கத்தில் தேவையான விவரங்கள்- தனிப்பட்ட தகவல்கள், முகவரி மற்றும் இதர விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

விவரங்களை வழங்கிய பிறகு, ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். இதற்கு வலைதளத்தில் வழங்கப்படும் கட்டண முறைகளில் ஒன்றை பயன்படுத்திக் கொள்ளளாம்.

விண்ணப்ப கட்டணம் செலுத்தியதும், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சோதனையில் எப்போது கலந்து கொள்வீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். இதற்கு தேதி மற்றும் நேரம் வாரியகா ஸ்லாட்கள் ஒதுக்கப்பட்டு இருக்கும். அவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

நீங்கள் தேர்வு செய்த தினத்தில் குறிப்பிட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் சென்று ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டும்.

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, உங்களுக்கான ஓட்டுநர் உரிமம் தயாரிக்கப்பட்டு, உங்களுக்கு அஞ்சல் வழியே அனுப்பப்படும் அல்லது ஆன்லைன் தளத்தில் இருந்தும் டவுன்லோட் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படும்.

google news