latest news
1% வட்டியில் தங்க நகைக் கடன் வாங்கலாம்.. எப்படி தெரியுமா?
இந்தியாவில் வங்கி சாரா நிதி நிறுவனமான ஐ.எஃப்.எல். ஃபைனான்ஸ் தங்க நகைக் கடன் வழங்க சிறப்பு மேளா அறிவித்துள்ளது. இன்று (செப்டம்பர் 25) துவங்கிய சிறப்பு தங்க நகைக் கடன் மேளா செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நாட்களில் டெல்லி மற்றும் குருகிராம் என்.சி.ஆர். பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த வட்டியில் தங்க நகைக் கடன் பெறலாம்.
ஐ.எஃப்.எல். அறிவித்துள்ள சிறப்பு மேளாவில் வாடிக்கையாளர்கள் வெறும் 1 சதவீத வட்டியில் தங்க நகைக் கடன் பெறுவதோடு, எவ்விதமான இதர கட்டணங்களையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. தங்க நகைக் கடனில் வாடிக்கையாளர்கள் தங்களது தங்க நகை அல்லது தங்க நாணயங்களை அடகு வைத்து அதற்கு பணம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த வகை திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதில் கடன் பெறுவதோடு, அவசரத்திற்கு விரைந்து நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். எளிதில் பெற்றுக் கொள்வது, மிகக் குறைந்த ஆவணங்களை சமர்பித்தல், குறைந்த வட்ட விகிதம் உள்ளிட்ட காரணங்களால் தங்க நகைக் கடன்கள் பிரபலமாக இருந்து வருகிறது.
உடனடி நிதி தேவை உள்ளவர்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் தங்க நகைக் கடன் வழங்கும் நோக்கில் தங்க நகைக் கடன் மேளா அறிவிக்கப்பட்டு இருப்பதாக ஐ.எஃப்.எல். ஃபைனான்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ஐ.எஃப்.எல். நிறுவனம் மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதோடு, வாடிக்கையாளர்கள் கடனை டிஜிட்டல் முறையில் செலுத்தும் வசதியையும் வழங்குகிறது.