இபிஎஃப்ஓ (EPFO) விதிகளின் கீழ், 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதியை கழிக்க வேண்டும். இபிஎஃப்ஓ-ஆல் ஒழுங்குபடுத்தப்பட்ட வருங்கால வைப்பு நிதிக்கு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 12% பங்களிக்க வேண்டும்.
அதே நேரத்தில் முதலாளிகள் இந்த 12% பங்களிப்பைப் வழங்க வேண்டும். முதலாளியின் பங்களிப்பு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது – 8.33% பங்களிப்பு பணியாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) செல்கிறது மற்றும் 3.67% இபிஎஃப் திட்டத்தில் செலுத்தப்படுகிறது. இந்த தொகையை ஊழியர்கள் சேமிப்பாக கருத முடியும். மேலும், அவசர காலங்களில் இதை பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன் இபிஎஃப்ஓ விதி 68J-இன் கீழ் ஏற்கனவே இருந்த ஆட்டோ கிளெய்ம் செட்டில்மென்ட் தகுதி வரம்பு ரூ.50,000-இல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 68J விதியின் கீழ் ஊழியர்கள் தங்களுக்கோ அல்லது தங்களை சார்ந்தவர்களின் மருத்துவ செலவுகளுக்கு முன்பணமாக விண்ணப்பிக்க முடியும்.
இந்த சூழ்நிலைகளில் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் மருத்துவமனை சிகிச்சை, பெரிய அறுவை சிகிச்சைகள், காசநோய், தொழுநோய், பக்கவாதம், புற்றுநோய், மனநலக் குறைபாடு அல்லது இதயக் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற இந்த விதியின் கீழ் முன்பணம் கோரி விண்ணிப்பக்க முடியு்ம.
உடல் ஊனமுற்ற உறுப்பினர்களுக்கு, முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது. இந்த பணத்தை கொண்டு அவர்கள் தங்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்கிக் கொள்ளலாம். இருப்பினும், இத்தகைய தொகையை பெறுவதற்கு உரிமம் பெற்ற மருத்துவர் அல்லது இபிஎஃப்ஓ-வால் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் இருந்து மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இபிஎஃப்ஓ 68-J விதியின் கீழ் முன்பணம் பெற விண்ணப்பிப்பது எப்படி?
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…