latest news
ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்.. ஆன்லைனிலேயே செய்யலாம்..
நாடு முழுக்க இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் அவசியமான ஆவணமாக இருந்து வருகிறது. வாகனம் ஓட்டுபவர்கள் உரிய ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். முந்தைய நடைமுறைகளின் படி ஓட்டுநர் உரிமம் பெறுவது, அதனை புதுப்பித்தல், மாற்றங்களை செய்வது என எல்லாவற்றுக்கும் உரிய போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருந்து வந்தது.
தற்போது இது தொடர்பான சேவைகள் ஆன்லைனிலையை கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் சார்ந்த சேவைகளை ஆன்லைனில் மேற்கொள்ளும் வசதி சீராக செயல்பட்டு வருகிறது.
இது சார்ந்த சேவைகளை முறைப்படுத்த மத்திய அரசு சார்பிலும் பிரத்யேக வலைதளம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், ஓட்டுநர் உரிமத்தில் பயனரின் வீட்டு முகவரியை மாற்றுவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
- முதலில் பரிவாகன் வலைதளம் செல்ல வேண்டும்.
- வலைதளத்தில் ஓட்டுநர் உரிமம் சார்ந்த சேவைகளை கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- இனி வீட்டு முகவரியை மாற்ற வேண்டும் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- உங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவிட்டு, அதனை உறுதிப்படுத்தக் கோரும் ‘Confirm’ பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இறுதியில் ஆதார் எண் மற்றும் அதற்கான ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் பதிவிட வேண்டும்.