Connect with us

tech news

அதிகரிக்கும் ஆதார் பஞ்சாயத்து.. உடனே இதை செய்தால் பேராபத்தில் இருந்து தப்பிக்கலாம்

Published

on

இந்தியாவில் ஆதார் அட்டை மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. இது இந்தியர்களின் அடையாள மற்றும் முகவரி சான்றாக விளங்குகிறது. 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் பல்வேறு சேவைகளை பெறவும், அரசு சார்ந்த சலுகைகளை பெறவும் அத்தியாவசியமாக இருக்கிறது.

இதே போன்று தகவல் தொடர்பு மற்றும் வங்கி சார்ந்த சேவைகளை பெறவும் ஆதார் அவசியம் என்ற நிலை உள்ளது. இத்தனை முக்கியத்துவம் வாயந்த ஆதார் எண் மற்றும் அதன் தகவல்களை ஒருவர் பத்திரமாக வைத்துக் கொள்வது அவசியம் ஆகியுள்ளது.

சமீப காலங்களில் ஆதார் சார்ந்து பல்வேறு ஏமாற்று வேலைகள் மற்றும் தகவல் திருட்டு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஆதார் விவரங்களை பாதுகாக்கவும், அதனை வேறு யாரும் தவறாக பயன்படுத்தி இருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதை கண்டறியும் வழிகள்:

  • முதலில் மைஆதார் போர்டல் அதாவது மைஆதார் (myAadhar) வலைதளம் செல்ல வேண்டும்.
  • இனி ஆதார் எண், கேப்ச்சா கோட் விவரங்களை பதிவிட்டு, ‘Login with OTP’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • நீங்கள் ஆதாருடன் பதிவிட்ட மொபைல் எண்ணிற்கு வந்த ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் பதிவிட்டு ‘Login’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்து ‘Authentication History’ ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களின் ஆதார் பயன்பாடு குறித்த விவரங்களை பார்க்கலாம். இதற்கு எந்த தேதியில் இருந்து ஆதார் வரலாற்றை பார்க்க வேண்டும் என்று தேர்வு செய்ய வேண்டும்.
  • ஆதார் வரலாற்றில் உங்களுக்கு தெரியாமல் ஏதும் பயன்பாடு இருப்பதை கவனித்தால், உடனே அதனை UIDAI வலைதளத்தில் முறையிடலாம்.

ஆதார் கார்டு பயோமெட்ரிக்-ஐ ஆன்லைனில் லாக் செய்வது எப்படி?

  • முதலில் மைஆதார் வலைதளம் செல்ல வேண்டும்.
  • இனி ‘Lock/Unlock Aadhaar’, ஆப்ஷனை க்ளிக் செய்து, அதில் இடம்பெற்றுள்ள வழிமுறைகள் மற்றும் விதிகளை முழுமையாக படிக்க வேண்டும்.
  • அடுத்து உங்களது விர்ச்சுவல் ஐடி, முழு பெயர், அஞ்சல் முகவரி, கேப்ச்சா உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு ‘Send OTP’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • ஆதார் எண்ணுடன் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு வந்த ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லை பதிவிட்டு ‘Submit’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் உங்களது ஆதார் கார்டு லாக் செய்யப்பட்டு விடும்.

ஆதார் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டது குறித்து புகார் அளிக்க 1947 என்ற எண்ணிற்கு அழைக்கலாம், அல்லது [email protected] என்ற இணைய முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

இவைதவிர UIDAI வலைதளத்தில் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு, பயன்பாட்டில் இருக்கிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *