latest news
உங்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறதா? அப்போ இந்த தகவலை
இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத் தொகையை டிடிஎஸ்-ஆக வருமான வரித்துறையில் செலுத்தும் விதிமுறை அமலில் உள்ளது. இந்தத் தொகையை பணியை வழங்கும் நிறுவனங்கள் சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன. இதுப் பற்றிய தகவல்களை நிறுவனங்கள் சார்பில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட ஊழியரின் சம்பளம், அதில் எத்தனை சதவீதம் டிடிஎஸ்-ஆக பிடித்தம் செய்யப்படுகிறது என்ற விவரங்கள் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் வருமான சான்றில் இடம்பெற்று இருக்கும். என்னும், நிறுவனங்கள் சார்பில் பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் தொகை முறையாக வருமான வரித்துறையில் செலுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான பிரச்சினைகள் சமீபத்தில் அரங்கேறியுள்ளன. இந்த நிலையில், உங்களுக்கு பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் தொகை வருமான வரித்துறையில் சரியாக செலுத்தப்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகிறது. இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
ஒரு பணியாளராக இருப்பவர்கள் எனில், 26AS-இல் வரி விலக்கை நீங்கள் சரிபார்க்க முடியும். இது மாதாந்திர வரி விலக்கைக் காட்டுகிறது. உங்களது பே ஸ்லிப்-இல் முதலாளி காட்டும் வரியை டெபாசிட் செய்கிறாரா என்பதை நீங்கள் சரிபார்க்க முடியும். வருடத்தில் டிடிஎஸ் கழிக்கப்பட்டதா இல்லையா என்பதை சரிபார்க்கலாம்.
- ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யும் வலைதளம் செல்ல வேண்டும்
- யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு பதிவிட்டு இணையதளத்தில் லாக்-இன் செய்ய வேண்டும்
- லாக்-இன் செய்ததும், நீங்கள் நீல நிற ரிப்பனுக்குச் சென்று, இ-ஃபைல் ஆப்ஷனை க்ளிக் செய்து ஸ்கிரால் டவுன் மெனுவை இயக்கலாம்.
- ‘வருமான வரி ரிட்டர்ன்ஸ்’ ஆப்ஷனை க்ளிக் செய்து, ஸ்கிரால் டவுன் மெனுவில், ‘வியூ 26AS’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி தனி இணையப்பக்கம் திறக்கும்.
- அடுத்து, நீங்கள் ‘வரிக் கிரெடிட்டை பார்க்க (படிவம் 26AS/வருடாந்த வரி அறிக்கை)’ என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.