tech news
ஃபீச்சர் போனில் எஸ்பிஐ அக்கவுண்ட் பேலன்ஸ் பார்ப்பது எப்படி?
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டில் இருந்த படி வங்க சேர்ந்த பல்வேறு சேவைகளை பயன்படுத்த முடியும். அந்த வகையில், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள தொகையை ஃபீச்சர் போனில் எப்படி பார்க்க முடியும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஃபீச்சர் போன் பயன்படுத்துவோர், எஸ்பிஐ எஸ்எம்எஸ் சேவை மூலம் தங்களது அக்கவுண்ட் பேலன்ஸ்-ஐ பார்க்க முடியும். இதற்கு, ஃபீச்சர் போனில் இருந்து ‘BAL’ என டைப் செய்து ‘09223766666’ என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.
இந்த குறுந்தகவல் வாடிக்கையாளர்கள் வங்கியுடன் இணைத்து வைத்திருக்கும் மொபைல் எண்ணில் இருந்து அனுப்புவது அவசியம் ஆகும்.
இவ்வாறு குறுந்தகவல் அனுப்பியதும், சில நொடிகளில் உங்களது அக்கவுண்டில் எவ்வளவு தொகை மீதமுள்ளது என்ற விவரம் குறுந்தகவலாக அனுப்பப்படும்.
ஃபீச்சர் போனில் வாட்ஸ்அப் வசதி பெற்றிருக்கும் வாடிக்கையாளர்கள் அந்த செயலி மூலமாகவும் எஸ்பிஐ அக்கவுண்ட் பேலன்ஸை அறிந்து கொள்ளலாம். இதற்கு மொபைலில் ‘+919022690226’ என்ற எண்ணை காண்டாக்ட்-இல் ஸ்டோர் செய்ய வேண்டும். பிறகு, வாட்ஸ்அப்-இல் இந்த எண்ணிக்கு ‘Hi” என குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.
பிறகு, வாட்ஸ்அப்-இல் எஸ்பிஐ வழங்கி வரும் சேவைகள் பட்டியல் பதிலாக அனுப்பப்படும். அதில், ‘Get Balance’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் உங்களது அக்கவுண்ட் பேலன்ஸ் திரையில் தோன்றும்.
ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் வாட்ஸ்அப் செயலியில் இதே வழிமுறையை பயன்படுத்தி தங்களின் எஸ்பிஐ வங்கி அக்கவுண்ட் பேலன்ஸ்-ஐ அறிந்து கொள்ளலாம்.