tech news
சைலண்ட் மோடில் போன் மிஸ்ஸாகிருச்சா… கண்டுபிடிக்க எளிய வழிகள் இதோ!
நம்முடன் எப்போதும் இருக்கும் மொபைல் போன் மிஸ்ஸாகிவிட்டால், அதைத் தேடி கண்டுபிடிப்பது பெரிய தலைவலி பிடித்த வேலை. அதுவும் அந்த போன் சைலண்ட் மோடில் இருந்தால் அதைக் கண்டுபிடிப்பது இன்னும் பெரிய சவாலான விஷயம்.
நீங்கள் பயன்படுத்துவது ஆன்ட்ராய்டு போனோ அல்லது ஐபோனோ சைலண்ட் மோடில் இருக்கும் போனை மிக எளிதாகக் கண்டுபிடிப்பதற்கான வழிகளைத் தெரிந்துகொள்வோமா?
ஆன்ட்ராய்டு
ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவராக இருந்தால் கூகுள் டிவைஸ் மேனேஜர் (Google Device Manager) மூலம் உங்கள் போனை கண்டுபிடிக்கலாம்.
* கம்ப்யூட்டர் உதவியோடு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டை லாக்-இன் செய்யவும்.
* android.com/devicemanager என்கிற முகவரிக்குச் சென்று உங்கள் ஜிமெயில் அக்கவுண்டை லாக் – இன் செய்யவும்.
* அதில் இருக்கும் `Ring’ என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்கள் போன் சைலண்ட் மோடிலேயே இருந்தாலும், இந்த ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் முழு வால்யூமில் ரிங் அடிக்கும்.
ஐபோன்
ஐஓஎஸ்ஸை பொறுத்தவரை ஆன்ட்ராய்டு போன்களை போலவே iCloud பயன்படுத்தி போனை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
* உங்கள் போனை கண்டுபிடிக்க இன்னொரு ஐஓஎஸ் டிவைஸ் அல்லது கம்ப்யூட்டர் மூலம் iCloud கணக்கில் லாக்-இன் செய்யவும்.
* iCloud.com இணையதளத்துக்குச் சென்று `Find My iPhone’ ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
* ’play a sound on your phone’ ஆப்ஷனை கிளிக் செய்து எளிதாக உங்கள் போனை கண்டுபிடிக்கலாம்.
இதையும் படிங்க: `மறந்தும் பண்ணிடாதீங்க பாஸ்’ – வாட்ஸ் அப்பில் செய்யவே கூடாத 7 விஷயங்கள்!