Connect with us

latest news

2 மணி நேரத்தில் கிடைக்கும்.. டிஜிட்டல் பான் கார்டு பெறுவது எப்படி?

Published

on

நிரந்தர கணக்கு எண் (PAN) பெறுவது கடினமாக உள்ளதா? அப்படியெனில் இரண்டு மணி நேரங்களில் டிஜிட்டல் பான் கார்டு பெற விண்ணப்பிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனை பேநியர்பை (PayNearby) அருகாமையில் உள்ள ரீடெயில் ஸ்டோர்களில் பெற முடியும்.

வருமான வரித்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின் படி இந்தியாவில் 42.10 கோடி ஆண்களும், 31.05 கோடி பெண்களும் பான் கார்டு வைத்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இது இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டில் அடங்கும். இரு பாலினத்தவரிடையே பான் கார்டு பெற்றுள்ள இடைவெளியை குறைக்கும் நோக்கில் கிரானா ஷாப்கள், மொபைல் ரீசார்ஜ் அவுட்லெட்கள், மருந்தகங்கள், போக்குவரத்து மையங்களில் பான் கார்டு விண்ணப்பங்களை கையாளும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

இத்தகைய ஸ்டோர்களில் இருந்து பான் கார்டு பெறுவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம். இவ்வாறு செய்ய ஆதார் கார்டு, ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், வாக்காளர் அடையாள அட்டை, மின்சாரம், குடிநீர் அல்லது கியாஸ் இணைப்பு கட்டண ரசீதுகள், ஓட்டுநர் உரிமம், கல்வி சான்று உள்ளிட்டவை இருப்பது அவசியம் ஆகும்.

பான் விண்ணப்ப முறைகள்:

  • புதிதாக பான் கார்டு பெறுகின்றீக்களா அல்லது ஏற்கனவே உள்ள கார்டு-ஐ அப்டேட் செய்யப் போகின்றீர்களா? என்பதை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
  • இனி உங்களது மொபைல் நம்பர் வழங்கி, அதனை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (ஓடிபி) மூலம் வெரிஃபை செய்ய வேண்டும்.
  • ஏற்கனவே பான் கார்டு இருப்பின் அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஸ்டோரில் இருப்பவர் அதனை உறுதிப்படுத்தி, விண்ணப்பம் தேவையா என்பதை பரிசீலனை செய்வார்.
  • பெயர், ஆதார் நம்பர் மற்றும் இதர தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டும்.
  • eKYC அல்லது ஸ்கேன் செய்வது என இரண்டில் ஒரு ஆப்ஷனை க்ளிக் செய்து தொடர வேண்டும். இதில் பான் கார்டு (ரூ. 107) அல்லது இ-பான் கார்டு (ரூ. 72) ஒன்றில் இரண்டை தேர்வு செய்ய வேண்டும்.
  • தேவையான கட்டண விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • இனி eKYC-யை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏதேனும் பிரச்சினை இருப்பின் பான் நம்பர் அல்லது விண்ணப்ப படிவ எண் உருவாக்கப்படவில்லை எனில், பணத்தை திரும்ப பெறுவதற்கான கோரிக்கையை எழுப்பலாம்.

google news