இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில் அனைத்துவித அரசு சார்ந்த சேவைகளை பெறுவது, சிம் கார்டு பெறுவது, கியாஸ் இணைப்பு, வங்கி கணக்கு என எல்லாவற்றுக்கும் ஆதார் கட்டாயம் என்ற நிலை உள்ளது. ஒருவரின் தனிப்பட்ட அடையாள சான்றாகவும் ஆதார் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இதே போன்று பான் கார்டும் மக்களுக்கு மிக முக்கிய அரசு ஆவணமாக இருந்து வருகிறது. எனினும், இவற்றை எல்லா சமயங்களில் கையில் கொண்டு செல்ல முடியாது. சில வகை அவசிய தேவைகளின் போது, ஆதார் அல்லது பான் கார்டு கையில் இல்லையா? கவலையே வேண்டாம் கையில் மொபைல் இருந்தால் எந்த அரசு ஆவணங்களையும் வாட்ஸ்அப் மூலம் எளிதில் பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பு: அரசு ஆவணங்களை இருந்த இடத்தில் வாட்ஸ்அப் மூலம் பெறுவதற்கு மத்திய அரசின் டிஜிலாக்கரில் ஏற்கனவே பதிவு செய்திருப்பது அவசியம் ஆகும்.
மொபைலில் டிஜிலாக்கர் சேவையை செயல்படுத்த பயனர்கள் அவரவர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனிற்கு ஏற்ற பிளே ஸ்டோரில் இருந்து டிஜிலாக்கர் அதிகாரப்பூர்வ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் பதிவிட்டு, செயலியை பயன்படுத்த விரும்பும் மொழியை தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு ‘Get Started’ ஆப்ஷனில் ‘Create Account’-ஐ க்ளிக் செய்ய வேண்டும்.
இதன்பிறகு திரையில் தோன்று பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதில் உங்களது தனிப்பட்ட விவரங்களான பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண் உள்ளிட்டவைகளை பதிவு செய்து ஆறு இலக்க பாதுகாப்பு குறியீட்டு எண்ணை வழங்க வேண்டும். இவற்றை பதிவிட்ட பிறகு, ‘Submit’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இதைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் வரும். இதனை வெற்றிகரமாக பதிவு செய்ததும், உங்களுக்கான டிஜிலாக்கர் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு விடும். இதன் பிறகு டிஜிலாக்கர் சேவைகளை வாட்ஸ்அப் செயலியிலும் பயன்படுத்த முடியும்.
இதற்கு மொபைலில் +91-9013151515 என்ற எண்ணை சேமித்துக் கொள்ள வேண்டும். இனி இந்த எண்ணிற்கு ‘hi’ என குறுந்தகவல் அனுப்பினால், டிஜிலாக்கர் சாட்பாட் பதில் அளிக்கும். இப்போது உங்களின் 12 இலக்க ஆதார் எண் பதிவிட வேண்டும். இதனை சரியாக பதிவிட்டதும், ஓடிபி பதிவிட வேண்டும். இதன் பிறகு டிஜிலாக்கரில் நீங்கள் பயன்படுத்த வேண்டிய சேவைகளை அதற்கான ஆப்ஷன்களை க்ளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதில் டிஜிலாக்கரில் உள்ள ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…