Connect with us

tech news

இதை செய்தால் Spam தொந்தரவே இருக்காது..!

Published

on

மொபைல் போன் வைத்திருப்போர் பெரும்பாலும் எதிர்கொள்ள பிரச்சினைகளில் பிரதானமாக இருப்பது ஸ்பேம் (Spam)அழைப்புகள் தான் எனலாம். தானியங்கி முறையில் வரும் விளம்பரம் மற்றும் சேவைகள் சார்ந்த அழைப்புகள் நமக்கு எரிச்சலை ஏற்படுத்துவதோடு, வேலை நேரங்களில் தொந்தரவாகவும் இருந்து வருகிறது.

இந்த பிரச்சினையில் சிக்கித் தவிப்பவர்கள் அதில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகள் உள்ளன. அவை என்ன என்பதை தொடர்ந்து பார்ப்போம்..

மொபைல் போனில் National Do Not Call Registry-யில் பதிவு செய்து டெலிமார்கெடிங் அழைப்புகளை தவிர்க்கலாம். ஆனால் மோசடி செய்பவர்கள் இந்த பட்டியலை தவிர்த்து விடுவார்கள் என்பதால், தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க இவ்வாறு பதிவு செய்து மட்டுமே போதுமானதாக இருக்காது.

உங்களுக்கு வரும் மோசடி அழைப்புகளை ரியல்-டைமில் கண்டறிந்து தடுக்கும் வசதி கொண்ட செயலிகளை பயன்படுத்தலாம். இது போன்ற சேவை வழங்குவதில் ட்ரூகாலர், நொமோரோபோ அல்லது ஹியா போன்றவை பிரபலமாக உள்ளன.

வைட்பேஜஸ் அல்லது ட்ரூகாலர் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தி, அறிமுகமில்லா எண்களை கண்டறிந்து தடுக்கலாம். இவை பெரிய அளவிலான டேட்டாபேஸ்-ஐ முடக்கும். உங்களது மொபைல் எண்ணை நம்பகத்தன்மை இல்லாத வலைதளங்கள் மற்றும் முகமைகளுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும். மோசடி செய்வோர் இதுபோன்ற முகமைகளில் இருந்து மொபைல் நம்பர்களை சேகரித்து அழைப்புகளை மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

வர்த்தக ஆணையம் அல்லது நீங்கள் பயன்படுத்தும் டெலிகாம் நிறுவனத்திடம் உங்களுக்கு வரும் தொந்தரவுகளை புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்யும் போது அவர்கள் தரப்பில் இருந்து மோசடி பேர்வழிகளை டிராக் செய்து முடக்குவதற்கான பணிகளில் ஈடுபடுவார்கள்.

 

google news