latest news
ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மலிவு விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இதுதவிர, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டும் சிறப்பு திட்டங்கள் மற்றும் திட்டப் பலன்களை பெறவும் ரேஷன் அட்டை மிகவும் அவசியமான ஆவணமாக உள்ளது.
இந்த நிலையில், ரேஷன் அட்டை வைத்திருப்போர் அத்துடன் தங்களது மொபைல் நம்பரை இணைக்க வேண்டியது அவசியம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் மூன்றுவகை ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. லைட் கிரீன் ரேஷன் அட்டை வைத்திருப்போர் அரிசி மற்றும் இதர பொருட்களை அருகாமையில் உள்ள ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
அநந்யோதயா அன்ன யோஜனா கார்டு மற்றும் காக்கி நிற கார்டு காவல் துறையினருக்காக வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் வெள்ளை கார்டு வைத்திருப்பவர்களுக்கு 3 கிலோ வரை சர்க்கரை கூடுதலாக வழங்கப்படுகிறது.
தற்போது ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அத்துடன் தங்களது மொபைல் நம்பரை ஆன்லைன் மூலம் இணைத்துக் கொள்ளும் வழிமுறை நடைமுறையில் உள்ளது. ஆன்லைனில், இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
தமிழக அரசின் tnpds.gov.in என்ற வலைதளம் சென்று மொபைல் நம்பரை ரேஷன் அட்டையுடன் பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர 1967 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு மொபைல் நம்பரை மாற்றுவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் மற்றும் மொபைல் வழியே மொபைல் நம்பரை இணைக்க முடியாதவர்கள் அருகில் உள்ள தாலுகா அலுவலகம் சென்று ரேஷன் கார்டு உதவி மையங்களில் நேரடியாக மொபைல் நம்பர் இணைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளலாம். இதற்கு குடும்ப தலைவரின் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல் ஆகியவற்றை உடன் எடுத்து செல்வது அவசியம் ஆகும்.