tech news
கூகுள் டிரைவில் தொலைந்த ஃபைல்களை ஈசியாக மீட்டுடலாம்… இத ஃபாலோ பண்ணுங்க…
கூகுள் டிரைவ் டெஸ்க்டாப் வெர்சன் 84.0.0.0ல் இருந்து 84.0.4.0க்கு மாறிய போது நிறைய பயனர்களுக்கு முக்கிய பைல்கள் தொலைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை சரிப்படுத்தும் வகையில் 85. 0.13.0 வெர்சனில் தொலைந்த ஃபைல்களை மீட்க ரெக்கவரி டூல் ஒன்றையையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த ஃபைல் ரெக்கவரி டூல் மூலம் பயனர்கள் தங்கள் கூகுள் கணக்கினை மொத்தமாக ஸ்கேன் செய்து பல்வேறு காலக்கட்டத்தில் தொலைந்த பைல்களை மீட்டுக்கொள்ள முடியும். இந்த டூல் ஸ்கேன் செய்து பேக்கப் ஃபைல்களில் இருந்து தொலைந்த ஃபைல்களை மீட்டு ”ரெக்கவர் ப்ரம் பேக்கப்” என்ற இடத்தில் சேவ் செய்து தந்துவிடும்.
பயன்படுத்துவது எப்படி:
உங்களுடைய லேப்டாப்பில் கூகுள் டிரைவ் டெஸ்க்டாப் வெர்சனை ஓபன் செய்ய வேண்டும். உங்கள் ஸ்கிரீனில் மேல் இருக்கும் மெனு பாரை க்ளிக் செய்யுங்கள் ( Mac). ஸ்கிரீனில் கீழ் இருக்கும் சிஸ்டம் ட்ரேவில் (Windows) எற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட கூகுள் டிரைவ் ஆப்பை ஓபன் செய்ய வேண்டும்.
பின்னர் கூகுள் டிரைவின் செட்டிங்ஸ் சென்று unlock additional or advanced settings என்பதை கிளிக் செய்யவும். பின்னர், Recover from Backups கிளிக் செய்தால் முன்னர் பேக்கப்பில் சேவ் செய்யப்பட்டு நீங்கள் மிஸ் செய்த ஃபைல்கள் காண்பிக்கப்படும் அதை வைத்து உங்களுக்கு தேவையான ஃபைலை நீங்கள் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்.