tech news
ஆதாரில் போட்டோ அப்லோட் செய்ய பயனுள்ள டிப்ஸ்
இந்தியாவில் அடையாள சான்றை கடந்து பல்வேறு சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஆதார் கார்டு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருந்து வருகிறது. 12 இலக்க எண் கொண்ட ஆதார் கார்டை கொண்டு வங்கி கணக்கு தொடங்குவது, புதிய சிம் வாங்குவது மற்றும் ஏராளாமான சேவைகளை பெற பயன் தருகிறது.
பல்வேறு இடங்களில் நாம் காண்பிக்க நேரிடும் ஆதார் கார்டில் நமது புகைப்படம் அத்தனை சிறப்பானதாக இருப்பதில்லை. எனினும் நமது ஆதாரில் மாற்றங்களை மேற்கொள்ள ஆதார் சேவை வழங்கும் UIDAI மூலம் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
- அந்த வகையில் ஆதாரில் உள்ள புகைப்படத்தை ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பாப்போம்..
- முதலில் UIDAI அதிகாரப்பூர்வ வலைத்தளம் – https://uidai.gov.in/en/ என்ற இனைய முகவரி செல்ல வேண்டும்.
- முகப்பு பக்கத்தில் Aadhar Enrollment படிவத்தை டவுன்லோட் செய்து, அதை பிரிண்ட் எடுக்க வேண்டும்.
- பிரிண்ட் எடுத்த Enrollment படிவத்தில் தேவையான விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
- அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று படிவத்தை அங்குள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
- இதை தொடர்ந்து உங்களின் பயோமெட்ரிக் விவரங்களை வழங்க வேண்டும்.
- இறுதியில் ஆதார் சேவை மைய அதிகாரிகள் உங்களை புகைப்படம் எடுப்பார்கள்.
- இந்த வழிமுறைகளை நிறைவு செய்த பிறகு ஆதார் அப்டேட் செய்வதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கபட்டுள்ளதை தெரிவிக்கும் குறுந்தகவல் உங்களின் பதிவு செய்யப்பட மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும்.
- இனி அதிகபட்சம் 90 நாட்களுக்குள் உங்களது விவரங்கள் ஆதார் வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டு விடும். இதை தொடர்ந்து அப்டேட் செய்யப்பட ஆதார் கார்டை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- ஆதார் பதிவிறக்கம் செய்ய UIDAI வலைதளத்தில் My Aadhar ஆப்ஷனில் உங்களின் ஆதார் நம்பரை உள்ளிட்டு தளத்தில் உள்ள Captcha-வை பதிவிட வேண்டும்.
- பிறகு OTP மூலம் உறுதிப்படுத்த வேண்டும். OTP பதிவிட்டு வெற்றிகரமாக லாக் இன் செய்த பிறகு வலைதளத்தில் உள்ள Download Aadhar ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி உங்களின் அப்டேட் செய்யப்பட ஆதார் பதிவிறக்கம் செய்யப்பட்டு விடும்.