latest news
டச் ஸ்கிரீன் கேஸ் கொண்ட இயர்பட்ஸ்.. கூடவே கொஞ்சம் கேஜெட்ஸ்.. ஹெச்.பி. அசத்தல்!
ஹெச்.பி. நிறுவனம் இந்திய சந்தையில் ஏராளமான கணினி சார்ந்த அக்சஸரீக்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ், வெர்டிக்கல் மவுஸ், வளைந்த மானிட்டர், 4K வெப்கேமரா மற்றும் டாக் உள்ளிட்டவை அடங்கும். புதிய அக்சஸரீக்கள் இந்திய ஹைப்ரிட் பணி கலாச்சாரத்தை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
ஹெச்.பி. போலி வோயேஜர் ஃபிரீ60 வயர்லெஸ் இயர்பட்ஸ்:
ஹெச்.பி. போலி வாயேஜர் மாடல் முழு சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இத்துடன் 16.5 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இதில் மொத்தம் மூன்று மைக்குகள் உள்ளன. இத்துடன் ப்ளூடூத் அடாப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த இயர்பட்ஸ்-இன் குறிப்பிடத்தக்க அம்சம் இதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் தான் எனலாம். இது ஒரு OLED ஸ்கிரீன் கொண்டு பாடல்களை மாற்றுவது, சாதனஙகளிடையே மாறிக் கொள்வது என ஏராளமான தாகியங்களுக்காக பயன்டுத்திக் கொள்ளலாம். இதில் உள்ள அம்சங்களை போன்றே விலையும் சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
ஹெச்.பி. 925 வெர்கிட்டல் மவுஸ் :
பெயருக்கு ஏற்றார்போல் இந்த மவுஸ் பயனர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவான மிக உறுதியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது பயனரின் தசைக்கு அதிக சிரமம் ஏற்படுவதை தடுக்கிறது. இந்த வெர்டிக்கல் மவுஸ் கழற்றக்கூடிய ரிஸ்ட் பகுதி, பயனர் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ள ஐந்து பட்டன்கள் வழங்கப்படுகிறது. இதனை அதிகபட்சம் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று சாதனங்களுடன் இணைக்க முடியும். இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 999 ஆகும்.
ஹெச்.பி. E45c 45-இன்ச் Curved மானிட்டர் :
இந்திய சந்தையில் இந்த மானிட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்து 26 ஆயிரத்து 631 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மானிட்டர் இரட்டை QHD Curved மானிட்டர் மற்றும் 165hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் வழங்குகிறது. இந்த மானிட்டரை விர்ச்சுவல் டூயல் டிஸ்ப்ளே மூலம் ஸ்ப்லிட் செய்து பயன்படுத்தலாம். இதில் இரண்டு யு.எஸ்.பி.டைப் சி போர்ட்கள், நான்கு டைப் ஏ போர்ட்கள், ஒரு டிஸ்ப்ளே போர்ட் மற்றும் ஒரு ஹெச்.டி.எம்.ஐ. 2.1 போர்ட் வழங்கப்படுகிறது.
ஹெச்.பி. 960 வெப்கேமரா :
ஹெச்.பி. நிறுவனத்தின் புதிய வெப்கேமரா 4K திறன் கொண்டிருக்கிறது. இதன் மூலம் நொடிக்கு 60 ஃபிரேம்கள் வேகத்தில் 4K வீடியோக்களை நொடிக்கு 30 ஃபிரேமில் இயக்குகிறது. இத்துடன் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.