ஹூவாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. சமீபத்தில் ஹூவாய் தனது வாட்ச் ஃபிட் 2 மாடலை அறிமுகம் செய்தது. தற்போது ஹூவாய் நிறுவனம் வாட்ச் GT4 மாடலை அறிமுகம் செய்துள்ளது.
அம்சங்களை பொருத்தவரை புதிய ஹூவாய் வாட்ச் GT4 மாடலில் 1.43 இன்ச் 466×466 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹார்ட் ரேட், ரத்தத்தில் உள்ள காற்றின் அளவு, மன அழுத்தம் மற்றும் உறக்கம் உள்ளிட்டவைகளை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக இந்த வாட்ச்-இல் ஹூவாய் ட்ரூஸ்லீப் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஹைக்கிங், சைக்லிங், ரன்னிங், கலோரி நிர்வாகம் மற்றும் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஹூவாய் வாட்ச் GT4 மாலில் ப்ளூடூத் காலிங் வசதி, குறுந்தகவல்களுக்கு வாட்ச் மூலம் பதில் அளிக்கும் வசதி உள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள பேட்டரி அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் 5 ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. புதிய ஹூவாய் வாட்ச் GT4 ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பிரவுன் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் புதிய ஹூவாய் வாட்ச் GT4 விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ ரூ. 17,999 விலையில் வாங்கிட முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு 12 மாதங்கள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…