Categories: latest newstech news

எல்லோரும் Flip போன் வாங்கலாம்.. அட, விலை இவ்வளவு தானா?

தொழில்நுட்ப சந்தையில் பெரிதும் சவாலான காரியங்களை எளிதில் சாத்தியப்படுத்துவதில் பெயர்பெற்ற பிராண்டு இன்ஃபினிக்ஸ். மலிவு விலை, மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வரும் இன்ஃபினிக்ஸ் சமீப காலங்களில் டாப் எண்ட் மாடல்கள் பிரிவிலும் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. அந்த வரிசையில், இன்ஃபினிக்ஸ் அறிமுகம் செய்திருக்கும் புதிய வகை ஸ்மார்ட்போன் தான் இன்ஃபினிக்ஸ் ஜீரோ ப்ளிப்.

இது இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் முதல் கிளாம்ஷெல் ஸ்டைல் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் ஆகும். 6.9 இன்ச் LTPO AMOLED ஸ்கிரீன், வெளிப்புறத்தில் 3.64 இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் ஜீரோ ப்ளிப் மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி 8020 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் அதிகபட்சமாக 16GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை 50MP கேமரா சென்சார்கள், முன்புறம் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டிருக்கும் புது இன்ஃபினிக்ஸ் ஜீரோ ப்ளிப் மாடல் இரண்டு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டிக்கு இந்த ப்ளிப் போன் 5ஜி, 4ஜி, எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எஃப்சி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜெபிஎல் டியூன் செய்யப்பட்ட ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் பவர் பட்டனிலேயே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ப்ளிப் போன் 4720mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 70W சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்:

இந்தியாவில் புதிய இன்ஃபினிக்ஸ் ஜீரோ ப்ளிப் மாடலின் 8GB, 128GB விலை ரூ. 49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ப்ளிப் போன் மாடல் பிளாஸம் குளோ மற்றும் ராக் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை அக்டோபர் 24 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 5000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Web Desk

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

50 mins ago

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…

59 mins ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

1 hour ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

1 hour ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

2 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

2 hours ago