Connect with us

tech news

ரூ. 14,900 ஐபேட் விற்பனையா? உண்மை இதுதான்

Published

on

ப்ளிப்கார்ட் வலைதளத்தில் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் விற்பனை பிளஸ் சந்தா வைத்திருப்போருக்கு மட்டும் நடைபெறுகிறது. இந்த விற்பனையில் பல்வேறு சலுகை மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அந்த வரிசையில், M2 சிப்செட் கொண்ட ஆப்பிள் ஐபேட் ஏர் மாடல் ரூ. 14,800-க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இது ஆப்பிள் நிர்ணயித்துள்ள விலையை விட ரூ. 90,100 வரை குறைவு ஆகும். உண்மையில் இத்தகைய சலுகை வழங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அப்படியாக இது பிழையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. கோட் விற்பனையின் அங்கமாக ஐபேட் ஏர் M2 மாடலின் விலை முறையே ரூ. 14,800 மற்றும் ரூ. 19,800 என குறிப்பிடப்பட்டு உள்ளது.

உண்மையில், இவற்றின் விலை முறையே ரூ. 1,04,900 மற்றும் ரூ. 1,09,900 ஆகும். இது உண்மையாகும் பட்சத்தில் கிட்டத்தட்ட 85 சதவீத தள்ளுபடி என்ற கணக்கில் வரும். இத்தகைய சலுகை வழங்கும் வாய்ப்புகள் குறைவு என்பதால், இது தவறுதலாக இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. மேலும், இந்த சலுகை விரைவில் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி, இந்த விற்பனை துவங்கும் போதுதான் இந்த விலை பற்றிய உண்மை விவரங்கள் தெரியவரும். இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் ஏர் மாடல்களை 11 இன்ச் மர்றும் 13 இன்ச் என இருவித அளவுகளில் விற்பனை செய்து வருகிறது. மேலும் இவை வைபை மற்றும் 5ஜி என இருவித மாடல்களில் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ. 59,900 என துவங்கி அதிகபட்சம் ரூ. 1,44,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

google news