Categories: tech news

ஐபோனுக்கு இவ்வளவு தள்ளுபடியா? சூப்பர் ஆஃபர்

உலகின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் வலைதளம் அமேசான். பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வரும் அமேசான், ஒவ்வொரு ஆண்டும் பிரைம் டே பெயரில் சிறப்பு விற்பனை திருவிழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான அமேசான் பிரைம் டே விற்பனை ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த விற்பனையின் போது அமேசான் தளத்தில் கிடைக்கும் பல்வேறு பொருட்களுக்கும் சிறப்பு சலுகைகள், தள்ளுபடி வழங்கப்படுகின்றன. விற்பனை துவங்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், அமேசான் தினமும் ஏதேனும் சலுகை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஐபோன் 13 மாடலுக்கு வழங்கப்பட இருக்கும் சலுகை விவரங்கள் வெளியாகி உள்ளன.

அமேசான் பிரைம் டே விற்பனையின் போது ஐபோன் 13 மாடலுக்கு அசத்தலான தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. இந்த மாடல் ரூ. 50,000-க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

தற்போது அமேசான் தளத்தில் ஐபோன் 13 மாடல் ரூ. 49,300 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் பிரைம் டே விற்பனையின் போது இந்த மாடல் ரூ. 48,999 விலையில் கிடைக்கும்.

இதுதவிர வங்கி சலுகை சேர்க்கும் போது இதன் விலை ரூ. 47,999 என மாறிவிடும். இந்த விலை ஜூலை 20 மற்றும் ஜூலை 21 என இரண்டு நாட்கள் வரை அமலில் இருக்கும்.

இந்திய சந்தையில் ஐபோன் 13 மாடல் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, ஐபோன் 13 பேஸ் மாடல் 128GB விலை ரூ. 79,990 என நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

17 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

18 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

21 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

21 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

22 hours ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago