latest news
என்னது 14 ஆயிரமா? ஐபோன் 14 பிளஸ் வாங்க செம சான்ஸ்..மிஸ் பண்ணிடாதீங்க..!
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் விற்பனை ஐபோன் 14 சிரிசில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வப்போது ஐபோன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அல்லது தள்ளுபடி அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் தற்போது அமேசான் வலைதளத்தில் ஐபோன் 14 பிளஸ் மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தள்ளுபடி எவ்வளவு நாட்கள் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. ஐபோன் 14 பிளஸ் மாடலுக்கு தற்போது வழங்கப்பட்டு இருக்கும் தள்ளுபடி விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
அமேசானில் தள்ளுபடி :
இந்தியாவில் ஐபோன் 14 பிளஸ் 128 ஜிபி மெமரி கொண்ட பேஸ் வேரியண்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அமேசான் தளத்தில் ஐபோன் 14 பிளஸ் பேஸ் வேரியண்டிற்கு 15 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஐபோன் 14 பிளஸ் விலை ரூ. 75 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.
இது அதன் பழைய விலையை ரூ. 14 ஆயிரம் குறைவு ஆகும். 128 ஜிபி மட்டுமின்றி ஐபோன் 14 பிளஸ் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இரு மெமரி மாடல்கள் விலை முறையே ரூ. 86 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 06 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 பிளஸ் மாடலை புளூ, மிட்நைட், பர்பில், பிராடக்ட் ரெட், ஸ்டார்லைட் மற்றும் எல்லோ என்று ஆறு வித ஆப்ஷன்களில் விற்பனை செய்து வருகிறது.
ஐபோன் 14 பிளஸ் அம்சங்கள் :
ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மாடலில் 6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் சிப், 6 ஜிபி ரேம், 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP ட்ரூ டெப்த் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4323 எம்ஏஹெச் பேட்டரி, மேக்சேஃப் மற்றும் கியூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் 20 வாட் அடாப்டர் அல்லது அதற்கும் அதிக திறன் கொண்டவைகளை பயன்படுத்தி 35 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும்.