Connect with us

latest news

ஒரு வருஷம் தான் ஆயிருக்கு… இந்த ஐபோன் மாடலுக்கு பிளான் டிஸ்கவுண்ட்… சரியான ஆஃபர் உடனே முந்துங்க..!

Published

on

அறிமுகமாகி ஒரு வருடமே ஆன ஐபோன் 15 ப்ரோ மாடலுக்கு விஜய் சேல்ஸ் சிறப்பான ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது.

மிகப்பெரிய தள்ளுபடி வழங்குவதற்கு பெயர் போன சேல்ஸ்தான் விஜய் சேல்ஸ். இந்தியன் ரீடைல் செயின் என்கின்ற பெயரில் விஜய் சேல்ஸ் ஆனது அதன் பண்டிகை கால சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக சிறப்பான தள்ளுபடி அறிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் மாடல் ஒன்றின் மீது பெரிய அளவிற்கு தள்ளுபடி அறிவித்துள்ளது.

இந்த மாடல் தற்போது இந்த விஜய் சேல்ஸ் மூலமாக இந்தியாவிலேயே மிகக் குறைவான விலைக்கு வாங்க முடியும். விஜய் சேல்ஸ் வலைதளத்தில் ஐபோன் 15 ப்ரோ மாடல் மீது 30,410 ரூபாய் பிளான்ட் டிஸ்கவுண்ட் ஆஃபர் கிடைக்கின்றது. இதன் மூலம் ஐபோன் 15 ப்ரோ மாடலை நாம் மிகக் குறைந்த விலையில் வாங்க முடியும்.

அதன்படி ஐபோன் 15 ப்ரோ மாடலானது ரூ.1,04,490 கிடைக்கின்றது. இதன் அசல் விலை ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய் ஆகும். இந்த பிளாக் டிஸ்கவுன்ட் ஆனது ஐபோன் 15 புரோ மாடலிங் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மற்றும் ஒயிட், பிளாக் கலர் மாடல்களுக்கு மட்டும் கிடைக்கின்றது. இந்த பிளாட் தள்ளுபடி ஆனது எந்தவித மறைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனை இல்லாமல் வழங்கப்படுகின்றது.

ஐபோன் வாங்க விரும்பும் நபர்கள் மலிவான விலைக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஐபோன் வாங்கிக் கொள்ள முடியும். ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு தான் இந்த ஐபோனை அறிமுகம் செய்திருந்தாலும் இது ஒரு சிறந்த தள்ளுபடி ஆகும். மேலும் இந்த நிறுவனம் தற்போது ஐபோன் 16 சீரியஸ் மாடல்களை அறிமுகம் செய்திருக்கின்றது.

இதனால் ஐபோன் 15 ப்ரோ மாடல் விலையை குறைத்து வழங்கி வருகின்றது. இருப்பினும் ஐபோன் 15 ப்ரோ மாடலிற்கு 30,410 என்ற பிளாட் தள்ளுபடி வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த ஆபர் ஆக இருக்கும். அது மட்டும் இல்லாமல் இந்த செல்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி மற்றும் பரிமாற்ற சலுகை கிடைக்கின்றது. இந்த ஆப்பரே பயன்படுத்தி உடனடியாக நீங்கள் ஐபோனை வாங்கிக் கொள்ள முடியும்.

google news