Connect with us

latest news

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலிலும், அந்த ஐபோனில் வழங்கப்பட்ட அதே சென்சார் தான் – லீக் ஆன தகவல்!

Published

on

iPhone-14-Pro-Max-1

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஐபோன் 15 சீரிசில்: ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என்று நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய ஐபோன் மாடல்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இவை ஏற்கனவே வெளியான தகவல்களுக்கு முரணாக உள்ளன. புதிய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் பிரைமரி கேமரா மற்றும் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் அதன் முந்தைய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் IMX803 பிரைமரி கேமரா சென்சார், 48MP குவாட் பேயர் கேமரா வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதே சென்சார்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஐபோன் சீரிசில் மேம்பட்ட கேமரா சென்சார் வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த பயனர்களுக்கு இது ஏமாற்றமான தகவலாகவே இருக்கும்.

iPhone-14-Pro-Max-1

iPhone-14-Pro-Max-1

முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களில் புதிய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் சோனி IMX903, 1″ சென்சார் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இத்துடன் புதிய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் M12 OLED பேனல் தொழில்நுட்பம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொழில்நுட்பம் சிறப்பான ஒன்றாக இருக்கும் என்று டெஸ்டிங்கில் தெரியவந்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்:

புதிய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் அளவுகளில் சிறிதளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வழங்கப்படும் என்றும் இது டாப் எண்ட் ப்ரோ மேக்ஸ் வேரியண்டில் மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த கேமரா 6x ஆப்டிக்கல் மேக்னிஃபிகேஷன் மூலம், ஐபோனின் ஜூமிங் திறனை மேம்படுத்தும்.

இத்துடன் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அதிவேக மற்றும் மேம்பட்ட கனெக்டிவிட்டி பெற முடியும். தற்போதைய ஐபோன் மாடல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க லைட்னிங் போர்ட் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

google news