tech news
இது லிஸ்ட்-லயே இல்லையே.. ஐபோனில் 40W சார்ஜிங் – லீக் ஆன புது தகவல்
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை வருகிற செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், ஐபோன் 16 சீரிஸ் குறித்த புதிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மேம்பட்ட வயர்டு மற்றும் மேக்சேஃப் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகப்படுத்திய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் மேக்சேஃப் மூலம் அதிகபட்சம் 15W சார்ஜிங் வசதியை வழங்கியது. மேலும் அதிகபட்சம் 27W வரையிலான வயர்டு சார்ஜிங் வசதியை வழங்கியது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன்களின் பேட்டரியை அதிவேகமாக சார்ஜ் செய்யும் வசதியை வழங்க இருப்பதாக தெரிகிறது.
இது குறித்து சீனாவை சேர்ந்த ஐடிஹோம் வெளியிட்ட தகவல்களில் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் அதிகபட்சம் 40W வயர்டு சார்ஜிங் வசதியும், வயர்லெஸ் முறையில் அதிகபட்சம் 20W சார்ஜிங் வசதியும் வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறது.
இது உண்மையாகும் பட்சத்தில் ஐபோன் 15 சீரிசுடன் ஒப்பிடும் போது ஐபோன் 16 சீரிஸ் சார்ஜிங் விஷயத்தில் மிகப்பெரிய அப்டேட் ஆக இருக்கும்.
புதிய ஐபோனின் ப்ரோ சீரிஸ் மாடல்களில் அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்படும் பட்சத்தில், ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 ஸ்லிம் மாடல்களில் அதிகபட்சம் 27W சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.