Connect with us

tech news

ஐபோன் 16 ப்ரோ சீரிஸ்- இந்தியாவில் முதல்முறை.. வெளியான வேற லெவல் தகவல்

Published

on

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஐபோன் 16 மாடல்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் மொத்தம் நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும். புதிய ஐபோன்கள் பற்றி ஏற்கனவே ஏராளமான தகவல்கள் வெளியாகிவிட்டன. இந்த நிலையில், புதிய ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் இந்தியாவில் அசெம்பில் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், இந்தியாவில் அசெம்பில் செய்யப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ப்ரோ சீரிஸ் மாடல்கள் இவை ஆகும். செப்டம்பர் மாதம் ஐபோன் 16 சீரிஸ் அறிமுகமான சில வாரங்களுக்குள் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களை அசெம்பில் செய்ய துவங்கும் என்று தெரிகிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்றும் திட்டம் விரிவடையும். புதிய ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அசெம்பில் செய்யப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், சீனாவில் வெய்போ தளத்தில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில் ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் ஸ்டிக்கரிங் இடம்பெற்றுள்ளது.

அந்த ஸ்டிக்கரில் “ஐபோன் 16 ப்ரோ, டிசைன்டு பை ஆப்பிள் இன் கலிபோர்னியா, அசெம்பில்டு இன் இந்தியா” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஜூலை மாதம் வெளியான தகவல்களில் ஆப்பிள் வினியோகஸ்தரான ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் 16 ப்ரோ மாடல்களை தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் அசெம்பில் செய்ய இருக்கிறது என குறிப்பிடப்பட்டு இருந்தது.

முதற்கட்டமாக ஏற்றுமதி செய்யப்படும் யூனிட்களை வைத்து ஆப்பிள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும். அதன்பிறகு செப்டம்பர் மாத மத்தியில் புதிய ஐபோன்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து அவற்றை அசெம்பில் செய்யும் பணிகள் துவங்கும். இந்தியாவில் ஐபோனின் ப்ரோ வேரியண்ட்கள் இந்தியாவில் அசெம்பில் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

google news