Connect with us

latest news

எகிறிய மவுசு.. பிச்சிக்கிட்டு போகும் ஐபோன் 16 விற்பனை.. குஷியில் ஆப்பிள்

Published

on

ஆப்பிள் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஐபோன் 16 சீரிஸ் விற்பனை சீனாவில் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. 2023 மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய ஐபோன் 16 சீரிஸ் விற்பனை 20 சதவீதம் வரை அதிகமாக நடைபெற்று வருகிறது.

உலகின் மிகப்பெரிய சந்தையில் மீண்டும் விற்பனை அதிகரிப்பது ஆப்பிள் நிறுவனத்தை குஷியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் அதன் முந்தைய வெர்ஷன்களை விட அதிக யூனிட்கள் விற்பனையாகி வருவதாக கவுன்டர்பாயின்ட் ஆய்வு விவரங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், ஐபோன் 15 சீரிசை விட வாடிக்கையாளர்கள் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் என டாப் எண்ட் மாடல்களை வாங்க அதிகம் விருப்பம் தெரிவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மூன்று வார கால விற்பனையில் ஆப்பிள் 2024 ஐபோன் மாடல்கள் அதன் முந்தைய சீரிசை விட அதிகளவில் விற்பனையாகி உள்ளது.

கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் ஆரம்பத்தில் ஏற்பட்ட உற்பத்தி குறைபாடு மற்றும் ஹூவாய் நிறுவனத்தின் மேட் 60 சீரிஸ் மாடலின் வெளியீடு போன்ற காரணங்களால் சந்தையில் கடுமையான போட்டியை எதிர்கொண்டது. இதன் காரணமாக ஐபோன் 15 சீரிஸ் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு வெளியான ஐபோன்கள் சரியான உற்பத்தி திட்டமிடல் மற்றும் விலை நிர்ணயம் போன்ற காரணங்களால் கணிசமான யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. விற்பனை அதிகரித்தது மற்றும் ஏஐ அம்சங்கள் வெளியிடப்பட்ட நிலையில், இந்த வாரம் ஆப்பிள் நிறுவன பங்குகளின் விலை கணிசமான அளவுக்கு அதிகரித்தன.

google news