Connect with us

latest news

சும்மாவே சார்ஜ் இறங்குது.. கடுப்பில் ஐபோன் 16 யூசர்ஸ்..!

Published

on

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை கடந்த செப்டம்பர் மாதம் தான் அறிமுகம் செய்தது. உலகம் முழுக்க விற்பனைக்கு வந்த ஐபோன் 16 சீரிஸ் புதிய சிக்கலில் சிக்கியுள்ளது. ஐபோன் 16 பயன்படுத்தும் பயனர்கள் தங்களது புது ஐபோனில் அடிக்கடி சார்ஜ் தீர்ந்து போவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து வெளியான தகவல்களில் ஐபோன் 16 யூனிட்கள் மட்டுமின்றி ஐஓஎஸ் 18-க்கு அப்டேட் செய்யப்பட்ட பழைய ஐபோன் மாடல்களிலும் இந்த பிரச்சினை ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ரெடிட், ஆப்பிள் சப்போர்ட் கம்யூனிட்டி தளங்களில் வெளியாகி உள்ள தகவல்களில் ஐபோன் பயன்படுத்துவோர், தங்களது யூனிட்டில் இதேபோன்ற சார்ஜிங் பிரச்சினை ஏற்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை பயன்படுத்தாமல் வைத்தால் கூட 15 முதல் 20 சதவீதம் வரை சார்ஜ் தீர்ந்து போவதாக பயனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், பலர் தங்களது ஐபோன் 90-100 சதவீதத்தில் இருந்து வெகு விரைவில் 60 சதவீதத்திற்கும் குறைவாக தீர்ந்து போவதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலை பயன்படுத்தாமல் வைத்தால் கூட சார்ஜ் தீர்ந்து போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோன்ற சம்பவத்தில் பயனர் தனது ஐபோன் 16-ஐ முழு சார்ஜில் வைத்து உறங்கியுள்ளார். ஒரே இரவில் பயன்படுத்தப்படாத நிலையில், காலையில் ஐபோன் 16 சார்ஜ் 18 சதவீதமாக சரிந்துள்ளது.

ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் ஐஓஎஸ் 18 பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டே வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த பிரச்சினைக்கு வேறு ஏதோ காரணங்கள் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. சிலர் ஐஓஎஸ் 18.0.1 அப்டேட் மற்றும் ஐஓஎஸ் 18.1 பீட்டாவில் இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். எனினும், இதனை ஆப்பிள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

google news