tech news
ஐபோன் ப்ளிப் உருவாக்கும் ஆப்பிள் – லீக் ஆன தகவல்
ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடலை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐபோன் ஃபோல்டபில் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.
மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் அளவில் பெரியதாக இருக்கும் என்றும், புத்தகம் போன்று மடிக்கக்கூடிய ஐபேட் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கடைசியாக வெளியான தகவல்களில் கூறப்பட்டது. இந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை ப்ளிப் ஸ்டைலில் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சாதனம் தொடர்பான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த மாடல் 2026 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் இது கிளாம்ஷெல் ரக டிசைன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது ஏற்கனவே வெளியான தகவல்களுக்கு முரணாக அமைந்துள்ளது. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஐபோனில் பயன்படுத்தும் டிஸ்ப்ளேக்களை சாம்சங் டிஸ்ப்ளேவிடம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆப்பிள் மற்றும் சாம்சங் டிஸ்ப்ளே இடையே கையெழுத்தாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. புத்தகம் போன்று அளவில் பெரிய மடிக்கக்கூடிய சாதனத்தை உருவாக்கும் முயற்சியை ஆப்பிள் கைவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.