latest news
எல்லாமே புதுசு.. மிரட்டும் ஐகூ 13.. விலை எவ்வளவு?
ஐகூ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஐகூ 13 ஸ்மார்ட்போனை ஒருவழியாக அறிமுகம் செய்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஐகூ 13 மாடலில் 6.82 இன்ச் 2K+ 144Hz Flat Screen வழங்கப்பட்டுள்து. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கிறது. இது சிப்செட் திறனை உறுதிப்படுத்தும் அன்டுடு வலைதளத்தில் 3.15 மில்லியன் புள்ளிகளை பெற்றது.
இந்த ஸ்மார்ட்போன் ஏவியேஷன் தர அலுமினியம் மிடில் ஃபிரேம், 7K வேப்பர் சேம்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது டூயல் டிரைவ் ஹீட் டிசிபேஷன் டிசைன் கொண்டுள்ளது. இது வழக்கமான கூலிங் சேம்பர்களை விட மும்மடங்கு அதிவேகமானது ஆகும்.
மெமரியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 16GB ரேம், 1TB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 5 வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, F/1.88, OIS, LED பிளாஷ், 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார் கொண்டுள்ளது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ வழங்கப்பட்டு இருக்கிறது.
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் டிசைன் கொண்டிருக்கும் ஐகூ 13 ஸ்மார்ட்போன் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப் சி மற்றும் 6150mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
புதிய ஐகூ 13 ஸ்மார்ட்போன் லெஜண்ட், டிராக், நேடோ கிரே மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 47,190 என துவங்குகிறது.