ஐகூ நிறுவனம் கடந்த மாதம் நடத்தியதை போன்றே ஐகூ “குவெஸ்ட் டேஸ் சேல்” பெயரில் சிறப்பு விற்பனையை அறிவித்து இருக்கிறது. ஜூன் மாதத்திற்கான ஐகூ குவெஸ்ட் டேஸ் சேல்- ஸ்மார்ட்போனிற்கு அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்குகிறது. சிறப்பு விற்பனைக்காக ஐகூ இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பிரத்யேக மைக்ரோசைட்டில் ஐகூ 9 ப்ரோ 5ஜி, ஐகூ 11 5ஜி உள்பட பல்வேறு ஐகூ ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதை எளிமையாக்கும் நோக்கில் ஐகூ நிறுவனம் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகையை வழங்குகிறது.
இதோடு ஹெச்.டி.எஃப்.சி. மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் வரையிலான உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்துவோ அல்லது மாத தவணை முறையை தேர்வு செய்ய வேண்டும்.
இந்திய சந்தையில் ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 59 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது சிறப்பு சலுகையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 51 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு விவோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஜூன் 2023 மாதத்திற்கு ஐகூ குவெஸ்ட் டேஸ் சேலில் ஐகூ 9 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிட முடியும். ஃபிளாக்ஷிப் ஐகூ 9 ப்ரோ பேஸ் மாடலை ரூ. 44 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். சீன சந்தையில் ஐகூ 10 பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஐகூ 9T பெயரில் ரி-பிராண்டு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸருடன் இந்திய சந்தையில் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் துவக்க விலை ரூ. 49 ஆயிரத்து 999 ஆகும். சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இது அதன் உண்மை விலையை விட ரூ. 10 ஆயிரம் குறைவு ஆகும். இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…