Connect with us

latest news

இது மட்டும் சரியா இருந்தால் ரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் ஐகூ நியோ 7 வாங்கலாம் – அமேசான் அதிரடி!

Published

on

iQoo-Neo-7

அமேசான் வலைதளத்தில் கிரேட் சம்மர் சேல் பெயரில் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சிறப்பு விற்பனை பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வீட்டு உபயோக பொருட்கள் தொடங்கி, மின்சாதனம், ஆடை என்று பல்வேறு பொருட்களுக்கும் கிரேட் சம்மர் சேல் விற்பனையில் அசத்தலான சலுகை, தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் முதல் நாள் விற்பனையின் போது ஐபோன் மாடல்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் இணையம் முழுக்க டிரெண்ட் ஆனது. இதுதவிர ஸ்மார்ட் டிவி மற்றும் வீட்டு உபயோக மின்சாதன பொருட்களுக்கும் அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், தற்போது ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போனிற்கு அமேசான் தளத்தில் அதிக தள்ளுபடி வழங்கப்படுகிறது.

iQoo-Neo-7

iQoo-Neo-7

ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 17 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் இதனை ரூ. 28 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். இதுதவிர ஐசிஐசிஐ மற்றும் கோடக் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ. 1250 வரை கூடுதல் தள்ளுபடி பெற முடியும்.

தள்ளுபடி மற்றும் வங்கி சலுகை சேர்க்கும்பட்சத்தில் ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 27 ஆயிரத்து 749 என்று குறைந்துவிடும். இரு சலுகைகளுடன் உங்களது பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ. 21 ஆயிரத்து 100 வரை தள்ளுபடி பெறலாம். எக்சேஞ்ச் சலுகையில் முழு தள்ளுபடி பெற்றுவிட்டால், ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போனினை ரூ. 6 ஆயிரத்து 649 விலையிலேயே வாங்கிவிட முடியும்.

ஐகூ நியோ 7 அம்சங்கள்:

iQoo-Neo-7

iQoo-Neo-7

அம்சங்களை பொருத்தவரை ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 64MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ், 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

google news