latest news
உங்க வாட்ச் ஹிஸ்டரி ஆஃப்ல இருக்கா..? உடனே ஆன் பண்ணுங்க..யூடியூப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!
யூடியூப் என்பது பொழுதுபோக்கிற்காக வீடியோ பார்க்கும் மற்றும் நமது திறமைகளை விடியோவாக பதிவிட்டு பணம் சம்பாதிக்கும் ஒரு செயலி அல்லது தளம் என்பது நாம் அறிந்த ஒன்றே. இந்த யூடியூப்பில் நாம் பார்க்கும் வீடியோக்களுக்கு ஏற்ப நமது யூடியூப் முகப்பு பக்கத்தில் வீடியோக்கள் பரிந்துரைக்கப்படும்.
இந்த அணுகுமுறையை யூடியூப் நீண்ட காலமாக பின்பற்றி வருகிறது. ஆனால், தற்பொழுது அதில் ஒரு பெரிய மாற்றத்தை யூடியூப் அறிவித்துள்ளது. அது என்னவென்றால், யூடியூப்பில் நாம் பார்க்கும் வீடியோக்கள் வாட்ச் ஹிஸ்டரி என்பதில் சேமிக்கப்படும். நாம் பார்க்கும் வீடியோ காட்டக்கூடாது என்பதற்காக நாம் அந்த அமைப்பை ஆஃப் செய்து வைத்து விடுகிறோம்.
ஆனால், இப்போது யூடியூப்பின் தாய் நிறுவனமான கூகுள் வெளியிட்ட அறிவிப்பின்படி, வாட்ச் ஹிஸ்டரி ஆனது ஆஃப் செய்யப்பட்டிருந்தால் வீடியோக்கள் பரிந்துரை (Recommended Videos) செய்வது நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உங்களது யூடியூப் முகப்பு பக்கத்தில் வீடியோக்கள் ஏதுவும் பரிந்துரைக்கப்படாது.
எனவே, நீங்கள் உங்களுக்கு தேவையான விடியோவை சர்ச் ஆப்ஷனை பயன்டுத்தியும், ஏற்கனவே சப்ஸ்கிரைப் செய்து வைத்திருக்கும் சேனலின் வீடியோவையும் பார்க்க முடியும். இந்த மாற்றம் வரும் மாதங்களில் அனைவருக்கும் மெதுவாக நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில பயனர்கள் ஏற்கனவே இந்த சிக்கலை எதிர் கொள்கின்றனர்.
YouTube now won’t show you any recommended videos unless you turn on watch history… pic.twitter.com/oNjwPPPAMc
— winston refreshes at 120Hz (@NotPenguino_) August 8, 2023