Categories: tech news

கம்மி விலை புது ஐடெல் ஸ்மார்ட்போன், வெளியீடு எப்போ?

ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் ஐடெல் A50 என அழைக்கப்பட இருக்கிறது. ஐடெல் நிறுவனத்தின் ஆசம் சீரிஸ் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதன்படி சமீபத்தில் அந்நிறுவனம் A70 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

தற்போது A சீரிசில் புது மாடலாக ஐடெல் A50 மாடல் அறிமுகமாக இருக்கிறது. புதிய ஐடெல் A50 மாடலில் 6.56 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க டூயல் கேமரா சென்சார்கள், பிளாஷ் வழங்கப்படலாம். இந்த போனின் பெரும்பாலான அம்சங்கள் ஐடெல் A70 மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போனுக்கு மட்டும் ஐடெல் நிறுவனம் இலவசமாக ஸ்கிரீனை மாற்றிக் கொடுக்கும் வசதியை வழங்கும் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த சலுகை ஸ்மார்ட்போன் வாங்கிய முதல் 100 நாட்களுக்குள் மட்டுமே பொருந்தும். புதிய ஐடெல் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 7000 பட்ஜெட்டிற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு செய்யும் போது பட்ஜெட் விலையில் 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் பிரிவில் ஐடெல் தனது போட்டியை வலுப்படுத்த முடியும். புதிய ஐடெல் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இது குறைந்த விலையில் புது ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்கு ஏற்றதாக இருக்கும்.

Web Desk

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

17 mins ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

32 mins ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

3 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

4 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

4 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

5 hours ago