Connect with us

tech news

ஏர்டெல், ஜியோ விலையை உயர்த்த பிஎஸ்என்எல் மட்டும் அப்படி செய்யவில்லை..!

Published

on

இந்திய டெலிகாம் சந்தையில் இன்று (ஜூலை 3) துவங்கி ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா என முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திவிட்டன. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது ரிசார்ஜ் கட்டணங்களை மாதம், காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் அதிகபட்சம் 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன.

விலை உயர்வு மூலம் வருவாயை அதிகப்படுத்திக் கொள்ள டெலிகாம் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த முடிவு காரணமாக முன்னணி டெலிகாம் சேவையை பயன்படுத்தும் பயனர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு வரலாறு காணாத வகையில் அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு பலருக்கும் பேரிடியாக அமைந்தது.

தனியார் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் விலையை உயர்த்திய நிலையில், அரசு துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தனது ரீசார்ஜ் கட்டணங்களை பழைய விலையிலேயே வழங்கி வருகிறது. இவை தற்போது மாற்றப்பட்ட ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவன சேவைகளின் ரீசார்ஜ் கட்டணங்களைவிட பெருமளவு குறைவு ஆகும்.

பிஎஸ்என்எல் ரிசார்ஜ் கட்டணங்கள் ரூ. 107 முதல் துவங்குகின்றன. இந்த ரீசார்ஜ் 35 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இதில் 3GB வரை 4ஜி டேட்டா மற்றும் 200 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

ரூ. 108 பிஎஸ்என்எல் ரீசார்ஜ்-இல் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1GB 4ஜி டேட்டா உள்ளிட்ட பலன்கள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் ரூ. 197 ரீசார்ஜ் 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இதில் 2GB 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், முதல் 18 நாட்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 199 ரீசார்ஜ்-இல் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2GB டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 397 ரீசார்ஜ் பொதுவாக பண்டிகை காலக்கட்டங்களில் வழங்கப்படும். இது 150 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 2GB 4ஜி டேட்டா முதல் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 797 ரீசார்ஜ் 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2GB டேட்டா உள்ளிட்டவை முதல் 60 நாட்களுக்கு வழங்கப்படும். பிஎஸ்என்எல் ரூ. 1999 ரீசார்ஜ்-இல் 365 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. இதில் 600GB 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் பிஎஸ்என்எல் டியூன்ஸ் மற்றும் பல்வேறு மூன்றாம் தரப்பு சேவைகளுக்கான சந்தா வழங்குகிறது.

google news