ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தீபாவளி தமாக்கா சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்குவதை ஒட்டி இந்த அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.
இதன் மூலம் பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ்களை செய்யும் போது இலவச வவுச்சர்களை பெற முடியும். இவற்றை பயண சேவை வழங்கும் தளங்கள், உணவு டெலிவரி தளங்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வலைதளங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பயனர்கள் அதிகபட்சம் ரூ. 3,350 வரையிலான பலன்களை பெறலாம். முன்னதாக பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய மற்றும் பழைய பயனர்களுக்கு ஜியோ ஏர்ஃபைபர் சந்தா வழங்குவதாக ஜியோ அறிவித்து இருந்தது.
தற்போது இந்த பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு பயனர்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல் அல்லது மைஜியோ ஸ்டோரில் ரூ. 20,000 அல்லது அதற்கும் அதிக தொகையை செலவிட வேண்டும்.
ஜியோ தீபாவளி தமாக்கா ஆஃபர்:
பயனர்கள் ரூ. 899 மதிப்புள்ள காலாண்டு சலுகையை ரீசார்ஜ் செய்யும் போது ரூ. 3,350 மதிப்பிலான பலன்களை பெற முடியும். இந்த சலுகையில் பயனர்களுக்கு வழக்கமாக அன்லிமிட்டெட் காலிங், தினமும் 2GB டேட்டா, 90 நாட்களுக்கு கூடுதலாக 20GB டேட்டா வழங்கப்படுகிறது.
இதுதவிர பயனர்கள் ரூ. 3,599 மதிப்புள்ள வருடாந்திர சலுகையை தேர்வு செய்யலாம். இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.
தீபாவளி தமாக்கா சலுகையின் கீழ் ரூ. 3000 மதிப்புள்ள ஈஸ்மைட்ரிப் வவுச்சர் வழங்கப்படுகிறது. இதனை பயனர்கள் தங்கும் விடுதி அல்லது விமான பயணங்களில் பயன்படுத்திக் கொள்ளாம்.
இதுதவிர ரூ. 200 மதிப்புள்ள ஏஜியோ வவுச்சர் வழங்கப்படுகிறது. இந்த வவுச்சரை பயன்படுத்த பயனர்கள் ஏஜியோ தளத்தில் ரூ. 999 அல்லது அதற்கும் அதிக தொகைக்கு செலவிட வேண்டும். இதே போன்று ரூ. 150 மதிப்புள்ள ஸ்விக்கி வவுச்சரும் வழங்கப்படுகிறது.
இந்த வவுச்சர்கள் ரீசார்ஜ் செய்யப்பட்டதும் பயனர்களின் யூசர் அக்கவுண்ட்களில் தானாக சேர்க்கப்பட்டு விடும். பயனர்கள் இதனை மைஜியோ செயலியில் இருந்தபடி பயன்படுத்திக் கொள்ளாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…