latest news
அடி ஒவ்வொன்னு இடியால விழுகுது… 3 வருடத்தில் முதல் முறை… ஜியோக்கு டாடா சொல்லும் கஸ்டமர்கள்..!
ரிலையன்ஸ் ஜியோ கஸ்டமர் மூலமாக அம்பானிக்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது. அது என்ன என்பதை இதில் பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ கஸ்டமர் மூலமாக அம்பானிக்கு ஒரு பின்விளைவு ஏற்பட்டுள்ளது. அதிலும் கடந்த ஜூலை மாதம் நடந்த ஒரு சம்பவத்தின் விளைவுதான் இது என்று பலரும் கூறி வருகிறார்கள். ஜூலை மூன்றாம் தேதியை பலரும் மறந்திருக்கலாம். ஆனால் இன்னுமும் பல கஸ்டமர்கள் அதை நினைத்து புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஜூலை மூன்றாம் தேதி தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களின் விலை அனைத்தையும் 12 முதல் 25 சதவீதம் வரையில் உயர்த்தியது. அதிகரிக்கப்பட்ட ரீசார்ஜ் கட்டணத்தால் ஜியோவின் பயனாளர்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது இரண்டாவது காலாண்டில் ஜியோ சேவையில் இருந்து சுமார் 10.9 கஸ்டமர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜியோ அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் பெரிய அளவு சரிவை கண்டுள்ளது இதுவே முதன்முறையாகும். இதில் மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் ஜியோவில் இருந்து வெளியேறிய கஷ்டமர்கள் பெரும்பாலானவர்கள் அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகிராம் ஆப்ரேட்டர் சேவை பிஎஸ்என்எல்-க்கு தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.
ஏனென்றால் இந்த பிஎஸ்என்எல் மட்டுமே இன்னும் தனது ரீசார்ஜ் கட்டண திட்டங்களின் விலையை உயர்த்தாமல் இருந்து வருகின்றது. ஜியோ தனது விலையை உயர்த்திய சிறிது நாட்களிலேயே ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தி இருந்தது இதனால் அனைவரும் பிஎஸ்என்எல் பக்கம் திரும்ப தொடங்கி விட்டார்கள்.
பொதுவாக ஒரு டெலிகிராம் நிறுவனம் தனது கட்டணங்களில் மாற்றங்களை கொண்டு வரும்போது அதன் பயனளர்களின் சிலர் மற்றொரு நிறுவனங்களுக்கு தாவுவது என்பது சகஜம்தான். ஆனால் கிட்டத்தட்ட 11 லட்சம் பயனாளர்கள் ஜியோவை விட்டு வெளியேறி இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஜியோவின் 5ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 17 மில்லியன் உயர்ந்துள்ளது என்று கூறப்படுகின்றது.
ஜியோ நிறுவனத்தில் 130 மில்லியன் ஆக இருந்த தனது பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது 147 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜியோ நிறுவனத்தின் ஏஆர்பியூ அதிகரித்திருக்கின்றது. எப்படி பார்த்தாலும் ஜியோ லாபத்தில் தான் உள்ளது. ஜியோ தனது ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்ததால் 10.9 மில்லியன் பயனாளர்களை இழந்திருப்பது சரிவாக பார்க்கப்பட்டாலும் 5ஜி நெட்வொர்க்கை வழங்குவதில் ஜியோ நிறுவனம் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றது. அங்கு விட்டதை இங்கு பிடித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் ஜியோ இருக்கின்றது.