tech news
நெட்வொர்க் மாறிடாதீங்க.. புது ஆஃபர்கள் அறிவித்த ஜியோ
ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு மூன்று புதிய ரீசார்ஜ் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை பல்வேறு பலன்ளை வழங்குகின்றன. இதில் டேட்டா பலன்கள், வெவ்வேறு வேலிடிட்டி மற்றும் ஓடிடி சந்தா உள்ளிட்டவை அடங்கும்.
சமீபத்திய விலை ஏற்றத்திற்கு பின் ஜியோ புதிய ரீசார்ஜ்களை அறிவித்து இருக்கிறது. மூன்று புதிய ரீசார்ஜ்களின் விலை முறையே ரூ. 329, ரூ. 949 மற்றும் ரூ. 1049 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் வேலிடிட்டி குறைந்த விலை ரீசார்ஜ்-க்கு 28 நாட்களுக்கும், விலை உயர்ந்த இரு ரீசார்ஜ்களுக்கு 84 நாட்களுக்குமாக வழங்கப்படுகிறது.
சலுகை பலன்கள்:
ஜியோ ரூ. 329 ரீசார்ஜ் செய்யும் போது தினமும் 1.5GB டேட்டா, 4G+ மற்றும் ஜியோ சாவன் ப்ரோ சந்தா வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஜியோ ரூ. 949 ரீசார்ஜ் செய்யும் போது தினமும் 2GB டேட்டா, 4G+ அன்லிமிட்டெட் 5G+ டேட்டா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
ரிலையன்ஸ் ஜியோ இந்த முறை அறிவித்ததில் விலை உயர்ந்த பிரீபெயிட் ரீசார்ஜ் ரூ. 1049-இல் பயனர்களுக்கு தினமும் 2GB 4G+ அன்லிமிட்டெட் 5G+ டேட்டா, சோனிலிவ் மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்ட பலன்கள் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
மூன்று புதிய பிரீபெயிட் ரீசார்ஜ்களில் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்து போகும் படச்த்தில் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைந்துவிடும். இவைதவிர ஜியோ ஏற்கவே வழங்கிவந்த ரூ. 999 ரீசார்ஜ் மீண்டும் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
அதன்படி ஜியோ ரூ. 999 ரீசார்ஜ் செய்யும் போது தினமும் 2GB 4G, அன்லிமிட்டெட் 5G டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் 64Kbps ஆக குறைந்துவிடும். இத்துடன் அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 100SMS போன்ற பலன்களை இந்த ரீசார்ஜ் வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 98 நாட்கள் ஆகும்.