ஜியோ நிறுவனம் தன்னுடைய 19 பிளான்களின் மொபைல் கட்டணத்தினை 25 சதவீதம் அதிரடியாக உயர்த்தி அறிவித்து இருக்கிறது. இது வரும் ஜூலை3 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட 19 பிளான்களில் 17 பிளான்கள் பீரிபெய்ட் என்றும் 2 பிளான்கள் போஸ்பெயிட் கட்டணம் என்றும் கூறப்படுகிறது. தினசரி ஒரு ஜிபி வழங்கும் ரூபாய் 209ஆக இருந்த பிளான் தற்போது ரூ249க்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. 155ரூபாய்க்கு இருந்த பிளான் 189 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
239 ரூபாயாக இருந்த 1.5 ஜிபி நெட் கட்டணம் 299 ரூபாயிற்கு மாற்றப்பட்டுள்ளது. 299 ரூபாயிற்கு இருந்த 2 ஜிபி நெட் கட்டணம் 349 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 399 ரூபாயிற்கு தினசரி 3 ஜிபி தரும் பிளான் விலை 449 ரூபாயிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் மேலும் பல பிளான்களின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு டெலிகாம் நிறுவனங்கள் பிளான்களின் விலையை உயர்த்தியது.
சுமார் இரண்டரை வருடங்கள் கழித்து தற்போது ஜியோ 25 சதவீதம் வரை கட்டணத்தினை உயர்த்தி இருக்கிறது. 5ஜி கட்டமைப்புக்காக அதிக முதலீடு செய்திருப்பதால் அதை ஈடு செய்யும் விதமாக இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆளாக ஜியோ பிளான்களின் விலையை உயர்த்தி இருக்கும் நிலையில் வோடவோன், ஏர்டெல் நிறுவனங்கள் விரைவில் கட்டணத்தினை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…