இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ தனது டேட்டா பூஸ்டர் திட்ட பலன்களை அதிரடியாக மாற்றி இருக்கிறது. அதன்படி பயனர்களுக்கு ரூ. 61 டேட்டா பூஸ்டர் திட்டத்தில் 4 ஜிபி வரை கூடுதல் டேட்டா கிடைக்கும். இதுபற்றிய தகவலை ரிலையன்ஸ் ஜியோ தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஐபிஎல் கிரெக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஜியோ ரூ. 61 டேட்டா பூஸ்டர் திட்டத்தில் மாற்றம்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ரூ. 61 விலை டேட்டா பூஸ்டர் திட்டத்தில் தற்போது 10 ஜிபி டேட்டா வழங்குகிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே வழங்கி வந்ததை விட 4 ஜிபி வரை அதிகம் ஆகும். முன்னதாக இதே திட்டத்தில் 6 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. புதிய மாற்றத்தின் படி ரூ. 61 டேட்டா பூஸ்டர் திட்டத்தில் தற்போது மொத்தமாக 10 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.
டேட்டா பூஸ்டர் பேக் என்பதால், இது ஏற்கனவே பயனர்கள் ரிசார்ஜ் செய்த திட்டத்துடன் கூடுதல் டேட்டா பெறுவோருக்கானது ஆகும். இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 15, ரூ. 25, ரூ. 61, ரூ. 121 மற்றும் ரூ. 222 விலைகளில் டேட்டா பூஸ்டர் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த ரிசார்ஜ் திட்டங்களில் முறையே 1 ஜிபி, 2 ஜிபி, 10 ஜிபி, 12 ஜிபி மற்றும் 50 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.
சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மைஜியோ செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி வரை இலவச டேட்டா வழங்கியது. இலவச டேட்டா ஜியோஎன்கேஞ்ச் மூலம் வழங்கப்பட்டது. மைஜியோ செயலி பயனர்களுக்கு அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களில் பயன்படுத்த கிடைக்கிறது.
இந்த செயலி ரிசார்ஜ், மியூசிக், கேமிங், மொபைல் பேங்கிங், செய்திகள், ஆரோக்கியம் சார்ந்த சேவைகள் மற்றும் பல்வேறு பலன்களை வழங்கி வருகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…