ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் தான் பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளின் விலையை உயர்த்தியது. இதைத் தொடர்ந்து ஏற்கனவே வழங்கிவந்த பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளை அந்நிறுவனம் சத்தமின்றி தனது வலைதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. நீக்கப்பட்டுள்ள பிரீபெயிட் ரீசார்ஜ்களின் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவை நீக்கப்பட்டது பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ரீசார்ஜ்கள் நீக்கப்பட்டு விட்டதால் பயனர்கள் இனி அவற்றை பயன்படுத்த முடியாது. இவற்றில் சில ரீசார்ஜ்களில் ஓடிடி பலன்களும், சிலவற்றில் டேட்டா வவுச்சர்களும் வழங்கப்பட்டு இருந்தது. ஜியோ நீக்கிய பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
ஜியோ ரூ. 3662 விலை ரீசார்ஜ்- இது தினமும் 2.5GB டேட்டா, சோனிலிவ் மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவைகளை 365 நாட்களுக்கு வழங்கின. தினமும் 2GB டேட்டா, சோனிலிவ் சந்தாவை 365 நாட்களுக்கு வழங்கி வந்த ரூ. 3226 ரீசார்ஜ் மற்றும் தினமும் 2GB டேட்டா, ஜீ5 சந்தா உள்ளிட்டவைகளை 365 நாட்களுக்கு வழங்கிவந்த ரூ. 3225 ரீசார்ஜ்கள் நீக்கப்பட்டு விட்டன.
இதே போன்று தினமும் 2.5GB டேட்டாவை 365 நாட்களுக்கு வழங்கிவந்த ரூ. 2999 ரீசார்ஜ் மற்றும் தினமும் 2GB டேட்டா, சோனிலிவ் மற்றும் ஜீ5 ஓடிடி சந்தா 84 நாட்களுக்கு வழங்கிவந்த ரூ. 909 ரீசார்ஜ், தினமும் 2GB டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்கிவந்த ரூ. 806 ரீசார்ஜ் மற்றும் தினமும் 2GB டேட்டா, ஜீ5 சந்தாவை 84 நாட்களுக்கு வழங்கிவந்த ரூ. 805 ரீசார்ஜ் நீக்கப்பட்டுள்ளது.
ஜியோ ரூ. 3178 ரீசீார்ஜ் நீக்கப்பட்டு இருக்கிறது. இதில் தினமும் 2GB டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை 365 நாட்களுக்கு வழங்கியது. இந்த வரிசையில் தினமும் 2GB டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டி, ஜியோடிவி பிரீமியம் சந்தா மற்றும் 78GB டேட்டா வழங்கி வந்த ரூ. 4498 ரீசார்ஜ் மற்றும் தினமும் 2GB டேட்டா, பிரைம் வீடியோ சந்தா வழங்கிவந்த ரூ. 3227 ரீசார்ஜ் நீக்கப்பட்டு இருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…