tech news
100GB கிளவுட் ஸ்டோரேஜ் இலவசம்.. வாரி வழங்கும் அம்பானி.. பெறுவது எப்படி?
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 47 ஆவது வருடாந்திர பொதுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் வைத்து ரிலையன்ஸ் நிறுவனம் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டது. அப்படியாக ஜியோவின் ஏஐ சார்ந்த அறிவிப்புகள் பேசு பொருளாகியுள்ளன. ஜியோ டிவி, ஜியோ ஏஐ கிளவுட், ஜியோ சினிமா என பல்வேறு புது சேவைகள் பற்றி ஜியோ அறிவித்தது.
இதில், ஜியோ ஏஐ கிளவுட் சேவையை பயன்படுத்தும் பயனர்களுக்கு அறிமுக சலுகையாக 100GB கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாக வழங்குவதாக ஜியோ அறிவித்து இருந்தது. அனைவருக்கும் ஏஐ எனும் திட்டத்தின் கீழ் அறிமுக சலுகையாக பயனர்களுக்கு இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வழங்குவதாக ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ ஏஐ கிளவுட் அறிமுக சலுகை இந்த தீபாவளி பண்டியை ஒட்டி பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ்-ஐ இலவசமாக பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை ஜியோ, புதிய சேவை அறிமுகமாகும் போது அறிவிக்கும். சேவை துவங்கியதும் பயனர்கள் 100GB இலவச கிளவுட் ஸ்டோரேஜ்-ஐ பயன்படுத்த துவங்கலாம். இத்துடன் கட்டண முறையில் ஸ்டோரேஜை அதிகப்படுத்திக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட இருக்கிறது.
பயனர்கள் ஏஐ கிளவுட் ஸ்டோரேஜில் தங்களது தனிப்பட்ட தகவல்கள் மட்டுமின்றி ஜியோ அறிவிக்கும் புதிய சேவைகளிலும் ஒருங்கிணைத்து பயன்படுத்தலாம். சமீபத்திய ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஜியோ நிறுவனம் ஜியோ டிவிஓஎஸ், ஜியோ ஹோம் ஐஓடி (IOT), ஜியோ டிவி பிளஸ், ஜியோ போன்கால் ஏஐ என ஏராளமான புதிய சேவைகளை அறிவித்தது.