latest news
தாறு மாறு தக்காளி சோறு..ஜியோபாரத்தின் அட்டகாசமான 4ஜி மொபைல் போன்கள்..விலையும் கம்மிதான்..இதில் இவ்வளவு அம்சங்கள் இருக்கா!..
உலகில் பல்வேறு வகையான ஸ்மார்ட்போன்கள் அடுத்தடுத்து அறிமுகமாகி கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு போனிலுல் ஏதோ ஒரு தனித்துவம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இதில் உள்ள வசதிகளை எல்லோராலும் பயன்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான். இவர்களுக்கென பிரபல ஜியோ நிறுவனமானது கைக்கு அடக்கமான ஜியோபாரத் எனும் மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் இந்த மாதிரியான மொபைல் போன்கள் 2ஜி வசதியுடனையே இருந்தன. ஆனால் மக்கள் 2ஜி நெட்வொர்க்குடன் அவதிபடக்கூடாது என ரிலையன்ஸ் ஜியோ தற்போது 4ஜி வசதியுடன் கூடிய ஜியோ பாரத் மொபைலை சந்தைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் இந்த மொபைலில் இது வரை இல்லாத அளவில் பல்வேறு சிறப்பம்சங்களும் அடங்கியுள்ளன. இந்த மொபைலின் மூலம் அன்லிமிடெட் கால்கள், UPI Payment வசதிகள், ஜியோவின் பொழுதுபோக்கு செயலிகளான ஜியோ சினிமா, ஜியோ சாவன் மற்றும் ஜியோவின் அனைத்து செயலிகளையும் பயன்படுத்த முடியும். இந்த நிறுவனத்தின் அறிவிப்பின்படி இந்த மொபைல் போனானது ரூ.999க்கு சந்தையில் கிடைக்கும் என அறிவிப்பு வந்துள்ளது.
இந்தியாவில் கிட்டதட்ட 250 மில்லியன் மொபைல் போன் உபயோகிப்பாளர்கள் 2ஜி மொபைலையே உபயோகிக்கின்றனர். இந்த நிலை மாறவே தற்போது 4ஜி மொபைலை அறிமுகப்படுத்துவதாக ஜியோ தலைவரான ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்த மொபைல் போனில் மிக குறைந்த மாத ரீசார்ஜ் திட்டங்களும் உள்ளன. இதன்படி மாதம் ரூ.123க்கு ரீசார்ஜ் செய்வதில் மூலம் நாம் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 14ஜிபி டேட்டாவையும் பெறலாம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தையே நாம் வருடத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்ய விரும்பினால் இதன் விலை ரூ.1234ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் வருடத்திற்கு 168ஜிபியாகவும் நாளுக்கு 0.5ஜிபி என டேட்டாவை உபயோகப்படுத்த முடியும். இந்த மொபைலானது தற்போது முதல்கட்ட பீட்டா சோதனைக்கு வருகின்ற ஜுலை 7 ஆம் தேதி வரவிருக்கிறது. ஜியோவின் இந்த மொபைல் எந்த அளவிற்கு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.