ஒவ்வொரு வருடமும் தீபாவளி வந்து விட்டாலே போதும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி ஆபர், தீபாவளி தள்ளுபடி என்ற பெயரில் சலுகைகளை வாரி வழங்குவார்கள். அதிலும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி கிப்ட், தீபாவளி சலுகை, தீபாவளி தள்ளுபடி என்ற பெயரில் அம்பானி பல சலுகைகளை வாரி கொடுப்பார். அம்பானி தனது ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான ஜியோபுக் லேப்டாப் சாதனத்தை தற்போது யாரும் எதிர்பார்க்காத விலையில் வழங்க இருக்கின்றார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜியோ புக் லேப்டாப் சாதனத்தின் விலை பல மடங்கு குறைந்து இருக்கின்றது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் பல கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட ஜியோ நிறுவனத்தால் கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட லேப்டாப் ஆன ஜியோ புக் சாதனத்தின் மீது பெரிய அளவு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜியோ புக் லேப்டாப் சாதனம் இந்தியாவில் வெறும் 16,890 என்ற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தீபாவளி கொண்டாட்டம் கலைக் கொட்ட துவங்கி இருப்பதால் ஜியோ புக் லேப்டாப் சாதனத்தை வெறும் 12,890 என்ற விலைக்கு விற்பனை செய்ய துவங்கி இருக்கின்றது ஜியோ நிறுவனம். இந்த லேப்டாப் சாதனத்தை வாடிக்கையாளர்கள் நேரடியாக Amazon.in அல்லது Reliance Digital தளத்தின் மூலமாக ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
இந்த லேப்டாப்பில் பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. இது மீடியா டெக் 87 88 மற்றும் jioOS-ல் இயங்குகின்றது. இது ஆண்ட்ராய்டு 4ஜி லேப்டாப் ஆகும். இதை 4ஜி மொபைல் நெட்வொர்க்குடன் அல்லது நேரடியாக உங்கள் பகுதியில் இருக்கும் வைபை நெட்வொர்க் உடன் இணைத்து பயன்படுத்த முடியும். இது வெறும் 990 கிராம் எடை கொண்டது, இது ஒரு நீல நிற மாறுபாட்டில் மட்டுமே கிடைக்கக்கூடியது,
இது யாருக்கெல்லாம் பயன்படும் என்றால் ஜியோ புக் லேப்டாப் வேர்ட் ஆவணங்களில் வேலை செய்ய அல்லது அடிப்படை பிரசன்டேஷன்களை உருவாக்குவதற்கு ஏற்றது. அதிலும் இது படிக்கும் மாணவர்கள் மற்றும் அடிப்படை கம்ப்யூட்டிங் ஆற்றல் தேவைப்படுபவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். தற்போது மலிவு வலையில் இந்த லேப்டாப் கிடைப்பதால் ஜியோ புக் வாங்க எண்ணுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…