latest news
90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஜியோஃபைபர் திட்டம் – அறிவிப்பு!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் பிரிவு ஜியோஃபைபர், இந்திய சந்தையில் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. புதிய திட்டம் தவிர ரூ. 399 விலையில் துவங்கி ஏராளமான திட்டங்களை ஜியோஃபைபர் வழங்கி வருகிறது. புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஜியோஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தின் விலை ரூ. 1200-க்குள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஜியோஃபைபர் ரூ. 1197 பிராட்பேண்ட் திட்ட பலன்கள்:
முற்றிலும் புதிய ஜியோஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் பயனர்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இது அன்லிமிடெட் டேட்டா வழங்கும் திட்டம் ஆகும். இதில் பயனர்கள் அதிகபட்சமாக 3.3 டிபி வரையி அதிவேக இணைய வசதியை வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்திய பின் இணைய வேகம் தானாக குறைய தொடங்கும். இதில் இணைய வேகம் 30Mbps ஆகும்.
ஜியோஃபைபர் ரூ. 1197 திட்டத்தை பெறுவது எப்படி?
ஆன்லைன் மூலம் ஜியோஃபைபர் சேவையில் ரிசா்ஜ் செய்ய பயனர்கள் மைஜியோ செயலி அல்லது ஜியோ வலைதளம் செல்ல வேண்டும்.
– மைஜியோ செயலியை திறக்க வேண்டும்.
– பதிவு செய்யப்பட்ட ஜியோ ஃபைபர் மொபைல் நம்பர் அல்லது சர்வீஸ் ஐடி பதிவிட்டு ஒ.டி.பி. (OTP) மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.
– இனி ஃபைபர் (Fiber) ஆப்ஷனை க்ளிக் செய்து மெனு ஆப்ஷன் (Menu Option) தேர்வு செய்ய வேண்டும்.
– ஜியோ ரூ. 1997 திட்டத்தை க்ளிக் செய்து ரிசார்ஜ் ரிப்பீட் (Recharge/Repeat) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
– இனி கட்டணம் செலுத்துவதற்கான வலைப்பக்கம் திறக்கும். அதில் கூகுள் பே யு.பி.ஐ., போன்பெ யு.பி.ஐ., பேடிஎம், வாாட்ஸ்அப் மற்றும் இதர ஆப்ஷன்கள் மூலம் கட்டணம் செலுத்த முடியும்.
– கட்டணம் செலுத்த வேண்டிய ஆப்ஷனை தேர்வு செய்த பின் பே நௌ (Pay Now) பட்டனை க்ளக் செய்ய வேண்டும்.
– ஜியோஃபைபர் ரிசார்ஜ் ஆன்லைன் ஆப்ஷனில் சைன்-அப் செய்வதற்கான மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு ரிசார்ஜ் செய்ததை உறுதிப்படுத்தும் குறுந்தகவல் வரும்.