Categories: tech news

ரூ. 11,499-க்கு QLED டிவியா? ஆளுக்கு ஒன்னு வாங்கலாம் போலயே..

இந்திய வாடிக்கையாளர்களுக்கு கோடக் நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. கோடக் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய டிவிக்கள் QLED ஸ்கிரீன் கொண்டுள்ளன. இவை 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. இவற்றில் டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் 48W ஸ்பீக்கர்கள் உள்ளன.

புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறும் கோட் விற்பனை 2024 மற்றும் அமேசான் பிரைம் டே 2024 விற்பனை திருவிழாவை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அம்சங்களை பொருத்தவரை கோடக் 32 இன்ச் QLED டிவியில் டால்பி டிஜிட்டல் பிளஸ், 48W சவுண்ட், டூயல் பாக்ஸ் ஸ்பீக்கர்கள், 3 HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள் உள்ளன. இத்துடன் கூகுள் ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவியில் நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் பல ஓடிடி தளங்களை கண்டுகளிக்க முடியும்.

இதேபோன்று கோடக் 43 இன்ச் QLED டிவியில் DTS ட்ரூசரவுண்ட் தொழில்நுட்பம், டால்பி டிஜிட்டல் பிளஸ், டால்மி அட்மோஸ், டால்பி விஷன் மற்றும் மேம்பட்ட ஆடியோ, வீடியோ அவுட்புட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இரு டிவி மாடல்களும் பெசல்-லெஸ் டிசைன், HDR10+ சப்போர்ட், 2GB ரேம், 16GB மெமரி, இன்பில்ட் க்ரோம்காஸ்ட், ஏர்பிளே சப்போர்ட் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட செயலிகளை பயன்படுத்தும் வசதி கொண்டுள்ளன. புதிய டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட கையோடு, கோடக் நிறுவனத்தின் கோடக் CA ப்ரோ, கோடக் 9XPro டிவி மாடல்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

விலை விவரங்கள்:

கோடக் 32 இன்ச் QLED டிவியின் விலை ரூ. 11,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த டிவி மாடல் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. கோடக் 43 இன்ச் QLED டிவி மாடல் விலை ரூ. 21,999 ஆகும். இது ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Web Desk

Recent Posts

தலைமை பொறுப்புக்கு வர வாரிசாக இருக்க வேண்டும்…வானதி சீனிவாசன் விமர்சனம்…

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்…

4 hours ago

அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி…பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்…

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…

4 hours ago

விராட் கோலிக்கு வந்த சோதனை…தள்ளிப்போகும் சாதனை?…

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.  இந்த…

5 hours ago

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

13 hours ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

14 hours ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

14 hours ago