எல்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது கிராம் 2023 சீரிஸ் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்தது. இதில் எல்ஜி கிராம் 2023, கிராம் ஸ்டைல், கிராம் 2-இன்-1 மற்றும் எல்ஜி அல்ட்ரா PC என நான்கு மாடல்கள் உள்ளன. அனைத்து லேப்டாப்களும் விண்டோஸ் 11 ஹோம் ஒ.எஸ்., SSD ஸ்டோரேஜ், அதிகபட்சம் 17 இன்ச் டிஸ்ப்ளே, 80 வாட் ஹவர் பேட்டரி, 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
எல்ஜி கிராம் 2023 அம்சங்கள் :
எல்ஜி கிராம் 2023 மாடலில் இன்டெல் EVO சான்று பெற்ற 13th Gen கோர் பிராசஸர், LPDDR5 6000 MHz ரேம், Gen.4 NVMe (x2) வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வேரியபில் ரிப்ரெஷ் ரேட், ஆன்டி-கிளேர் IPS டிஸ்ப்ளே மற்றும் 400 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது.
இந்த லேப்டாப் உடன் இன்டெல் யுனிசன் மற்றும் எல்ஜி சின்க் ஆன் மொபைல் சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதை கொண்டு அழைப்புகள் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ்களை டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம். பாதுகாப்பிற்கு எல்ஜி செக்யுரிட்டி கார்டு, மிராமெட்ர்கிஸ்-இன் எல்ஜி கிலான்ஸ் மற்றும் ஃபேஸ் லாக்-இன் வசதிகள் வழங்கப்படுகின்றன.
எல்ஜி கிராம் ஸ்டைல் :
புதிய எல்ஜி லேப்டாப் 14 இன்ச் WQXGA+ OLED டிஸ்ப்ளே, 2880×1800 பிக்சல் ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 100 சதவீதம் DCI-P3 கலர் கமுட் வழங்கப்படுகிறது. இந்த லேப்டாப் 13th Gen இன்டெல் கோர் பிராசஸர் மற்றும் இன்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ் கொண்ட்ருக்கிறது. இத்துடன் அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி NVMe SSD வழங்கப்படுகிறது. விண்டோஸ் 11 ஒஎஸ் கொண்டிருக்கும் எல்ஜி கிராம் ஸ்டைல் மாடலில் டால்பி அட்மோஸ் வசசதி, 72 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
எல்ஜி கிராம் 2-இன்-1 :
புதிய எல்ஜி கிராம் 2-இன்-1 மாடலில் 16 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் இதனை லேப்டாப் அல்லது டேப்லெட் போன்று பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 13th Gen இன்டெல் கோர் பிராசஸர், இன்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ், 32 ஜிபி LPDDR5 ரேம், 2 டிபி NVMe Gen4 SSD ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இந்த நோட்புக் விண்டோஸ் 11 ஹோம் ஒஎஸ், 80 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
எல்ஜி அல்ட்ரா PC :
எல்ஜி கிராம் சீரிசின் அடையாளத்தை எடுத்துக் கூறும் வகையில் எல்ஜி அல்ட்ரா PC இருக்கிறது. இந்த சாதனம் அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதில் 16 இன்ச் WUXGA டிஸ்ப்ளே, ஆன்டி-கிலேர் IPS பேனல், 300 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் மெல்லிய பெசல்கள் உள்ளன. இந்த லேப்டாப்பில் AMD Ryzen 7000 சீரிஸ் பிராசஸர், AMD Radeon 7 கிராஃபிக்ஸ், மற்றும் 16 ஜிபி DDR4 ரேம். இந்த லேப்டாப் 72 வாட் ஹவர் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
விலை விவரங்கள் :
எல்ஜி கிராம் 2023 14 இன்ச் மாடல் துவக்க விலை ரூ. 1 லட்சத்து 27 ஆயிரம்
எல்ஜி கிராம் 2023 16 மற்றும் 17 இன்ச் மாடல் துவக்க விலை ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்து 990
எல்ஜி கிராம் 2023 ஸ்டைல் மாடல் துவக்க விலை ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்து 990
எல்ஜி கிராம் 2023 2-இன்-1 மாடல் துவக்க விலை ரூ. 2 லட்சத்து 05 ஆயிரம்
எல்ஜி அல்ட்ரா PC துவக்க விலை ரூ. 1 லட்சத்து 04 ஆயிரம்
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…